உதிரும் கனவுகள் – காடு நாவல் 

பல முறை படித்த நாவல் காடு . ஒருஒரு முறையும் புதிதாய் திறந்து கொள்ளும் ஒரு செவ்வியல் ஆக்கம்.
இந்த நாவாலை பற்றி  இணையத்தில் எழுதியவர்  பலரும் காட்டில் வாழ்ந்த அனுபவத்தை அளித்ததாக எழுதி உள்ளனர் . நுட்பமான இயற்க்கை விவரணைகள் பற்றி எழுதி உள்ளனர் .நூல் பெரும்பாலும் முதல் காதலின் சித்திரமாக அறிமுகப்படுத்த பட்டுள்ளது . ஆனால் இந்த நாவலை  மற்றும் ஒரு தளத்திலும் வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன் . 

இதை கிரியிடம் இருந்து பிற்ப்பாடு அழிந்து போன ஒரு விதத்தில் அவனே அழித்து கொண்ட ஒரு ஆன்மீக நுண்ணுணர்வின் சித்திரம் என்று வாசிக்கலாம்.இந்த நாவல் தொடங்கும் இடம் மிகவும் நுட்பமானது கிரி தன்னுடைய கடைசி காலத்தில் அவன் தன் இளமை காலத்தில் பணியாற்றிய காட்டு பகுதி தற்போது முற்றிலும் அன்னியமாகி, மலம் சூழ்ந்து, வீடுகள் கட்டப் பட்டு, அழிந்து போய் இருப்பதை பார்கிறான்.

இதை  ஒருவன் தன்னுடைய வாழ்வின் கடைசியில்  இளமையின் பகற்கனவுகளை மீண்டும் நினைத்து பார்கிறான்  பொருள் கொள்ளலாம். அவை முற்றிலும் அழிவதில்லை அவை அந்த மிலாவின் தடம் போல் காய்ந்து மண் நிறைந்து மறைந்து கிடக்கின்றன . அந்த நினைவின் தொடரில் இருந்து அவன் வாழ்க்கை தொடங்குகிறது. 

இந்த நாவலில் கிரி காணும் காடு, அவனுள் ஒளிரும் கவிதையின் வரிகள் என அனைத்துமே அவனை  சராசரி வாழ்வில் இருந்து உயர்த்த கூடிய ஒரு ஆன்மீக விசை என்று வரையறை செய்யலாம் . மாறாக அவன் தாய் , மாமி மீதான காமம் , இவை அவனை சராசரி தளத்திற்கு இழுக்ககூடிய விசை . இவை இரண்டும் அவனுள் உக்கிரமாக போராடி கொள்கின்றன . 

நீலி மீது இருக்கும் காதல் முற்றிலும் பித்து நிலையில் நிகழ  கூடியதாகவே உள்ளது  .கிரி நீலியை தன் தாயுடன் ஒப்பிட்டு பார்க்கும் தருணம் நமக்கு ஒன்று உணர்த்துகிறது , கிரி உள்ளூர இந்த பித்து நிலை என்றும் நீடிக்காது என்பதை உணர்ந்தே உள்ளான் என்று படுகிறது . பல நூறு பாவனைகள் மூலமாக அவன் அதை நோக்கி நகர்கிறான் .  அவன் ஆழ்மனம் காணும் அந்த கொடிய கனவு அதையே நமக்கு தெரிவிக்கிறது.  
அவன் மாமியுடன் அந்த அறையில் இருக்கும் போது , ஒரு காஞ்சீர மரத்தை பற்றி கொண்டு அதில் இருக்கும் ஆணியை பிடித்து தொங்குகிறான் .  இந்த ஆணி குட்டப்பன் வன நீலியை அடைக்க சொன்ன கதையில் வருவது . அப்போது அவனுள் ஏதோ ஒன்று அவன் அந்த பிடியில் இருந்து  விழ வேண்டும் என்று விரும்புவதை கவனிக்கிறான்.
அந்த விசை எது மலை உச்சியின் மௌனத்தை கண்ட பிற்ப்பாடும் நெருசல் சந்துகளில் மனிதனை பிடித்து தள்ளும் விசை எது ? காட்டின் தூய்மையை சுவாசித்த பிறகு சாக்கடை பொந்துகளில் வாழவைக்கும் விசை.

கிரியின் அச்சம் என்று அதை சொல்லலாம் .வெட்ட வெளியை கண்டு , அஞ்சி தன் கூட்டில் ஒடுங்கி கொள்ளும் மனிதனின் இருத்தலின் அச்சம் . கிரி தன் அன்னையின் பிடியில் இருந்து வெளிவர விரும்பாதவனாகவே உள்ளான் . பெரும்பாலும் மிகவும் ஆதிக்கமான தாய் பெற்ற மகன்களில் இந்த சிக்கல் இருப்பதை பார்க்கலாம் . கிரி, சிறகு முளைத்தப் பிற்பாடு கூட பறக்க அச்சம் கொண்டவன் . விஷ காய்ச்சல் வந்து பலர் இறக்கும் இடத்தில் அவன் கொள்ளும் அச்சம் , இதை அவன் திருமணம் ஆன அடுத்த நாள் கிரியின் அக்கா குறிப்பிடுகிறாள் . அவனால் தன் கனவுகளை ஆசைகளை அடையவே முடிவதில்லை . அதை அடைவதற்கு கொள்ள வேண்டிய வைராகியம் அவனிடத்தில் இல்லை . 

அவன் வாழ்வின் பிர்ப்பகுதியில் அவன் அடைந்த வீழ்ச்சி , அவன் தன்னையே பழி வாங்கி கொள்ளும் பாவனையுடன் இந்த கழிவிரக்கம் நோக்கி நகர்ந்து கொள்கிறான் போல .  ஒரு ஒரு நொடியையும் தற்கொலை செய்து கொள்பவனை போல , தன்னை வதைத்து கொண்டு கீழ் இறங்கி வேறு யாரையோ பழி வாங்குபவன் போல்.
அவன் வாழ்க்கையில் பறக்க முடிந்தது ஒரு நொடி மட்டுமே ,அந்த நினைவுகளை மட்டும் சுமந்து தன் கனத்த சிறகுகளை சுமந்து இந்த உலகில் நடக்கிறான் . அவன் சிறகுகள் அந்த கணங்களை அவன் எத்தனை மறக்க நினைத்தாலும் அவனுக்கு நினைவு படுத்தி கொண்டே உள்ளது . 

இந்த சிக்கல் குட்டபனுக்கோ , ஐயருக்கோ இல்லை. அய்யர் மொத்தமாக நாட்டை துறந்தவர் , குட்டப்பன் இரண்டின் சமநிலை அறிந்து ஆடுபவன். பாவம் கிரி !

இந்த நாவல் முடியும் இடம் , அவன் வீழ்ச்சியின் முதல் படி  , தொடங்கும் இடம் அதன் முழு தோற்ற்றம். 

Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s