காந்தியும் கீதையும்

காந்தியும் கீதையும் 

காந்தியின் ஆன்மீக மற்றும் மதம் சார்ந்த சிந்தனை வளர்ச்சியை பதிவு செய்ய கூடிய மிக முக்கியமான நூல் காந்தியின் மதம் : சுய-நூற்கப்பட்ட மேல் ஆடை ஆங்கிலத்தில்  (Gandhi’s Religion – Homespun Shawl). காந்தி அறிவியல் காலத்தின் தொடக்கத்தில் பிறந்தவர் , அன்றைய சிந்தனைகளில் மதம் மிகவும் பின்னடைவை சந்தித்து இருந்தது  . டார்வினின் சிந்தனை உருவாகி சுமார் 25 ஆண்டுகள் கழித்து அவர் பிறந்தார் . அன்றைய நவீன சிந்தனை உருவாகி வந்த மையன்காளன லண்டனில் தன் இளமை காலத்தில் வாழ்ந்தவர் . ஆனால் அவர் வாழ்வில் மதம் மிக விரிவான பாதிப்பை செலுத்தியது . அவரின் ஆன்மீக நோக்கை புறம் தள்ளி விட்டு அவரை நாம் அணுகவே முடியாத அளவுக்கு . நவீன சிந்தனையாளர்கல்  பலருக்கு  காந்தியின் இந்த அம்சம் ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது . அவர் காலத்திலும் பிறகும் கூட . ஆனால் அவரை செரியாக புரிந்து கொள்ள அவரின் மதம் சார்ந்த சிந்தனை மிகவும் முக்கியமானது . அதை இந்த நூல் சிறப்பாக செய்கிறது . 
 
வேர்களை பற்றுதல் : 
 
காந்தியின் மதம் சார்ந்த தொடக்கம் அவரின் தாய் அவருக்கு அளித்து . காந்தியின் தாய் கடுமையான நோம்புகள் பின்பற்றக்கூடியவர் . அவர் வாழ்நாளும் முழுவது சேவை செய்யும் மனப்பாங்கு கொண்டவராக இருந்தவர் , இதை தன் தாயிடமே பெற்று கொண்டார் . காந்தியின் தாய் ப்ரனாமி என்றும் சம்ப்ரிதாயத்தில் இடுபாடு கொண்டவர் . கிதைக்கு நிகராக குரானை வணங்கும் ஒரு மரபு . காந்தியின் குடும்பம் பல்வேறு மத நம்பிக்கைகள் இடையில் நிகழும் ஒரு உரையாடல் காலமாக இருந்துள்ளது. இந்த பாதிப்புகள் இளம் காந்தியிடம் நாம் காண முடியும் . காந்தியின் இளம் நண்பர்கள் அவரின் மத நம்பிக்கையை விமர்சிக்கும் தோறும் அவர் விடாபிடியாக தன் தாய் தனக்கு அளித்த வேறை பற்றி கொண்டார் என்று சொல்லாலம். ஆனால் இளம் காந்தி ஒன்றை உணர்ந்தார் தனக்கு தன் மரபை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்ற தன்னுணர்வை . 
 
முதல் தடுமாற்றம் : 
காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்த காலத்தில் அவர் ஒரு தடுமாற்றத்தை சந்திக்க வேண்டி இருந்தது . அவருடைய கிருத்துவ நண்பர்கள் கிருத்துவ மதமும் பைபிள் நூலில் தான் முழு முதல் உண்மையும் ஆண்டவானால் மனிதனுக்கு அளிக்கப் பட்டுள்ளது என்று வாதிட்டனர். அவரை தொடர்ந்து கிருத்துவ மதம் மாற சொன்னார்கள் . இதை காந்தியால் ஏற்று கொள்ள முடியவில்லை .  ஆனால் அவரால் எதிர்த்து சொல்ல கூடிய பதில்களும் அவரிடம் அப்போது இருக்க வில்லை . 
அந்த தருணத்தில் அவர் தன் கேள்விகளையும் சந்தேகங்களையும் தொகுத்து தன் நண்பரும் குருவான ராய்ச்சந்த்க்கு கடிதமாக அனுப்பினார் . 
 
பதில்களும் தெளிவும் 
ராய்ச்சந்த் அவருக்கு அனுப்பிய பதில்களும் அவர் அனுப்பிய நூல்கள் காந்திக்கு ஒரு தெளிவை அளித்தது . அதில் இருந்து காந்தியின் மதம் சார்ந்த பார்வை தெளிவடைந்தது . அவரின் ஆன்மிகம் அத்வைத சிந்தனையால் மலர்ச்சி அடைந்தது . 
– மனிதன் ஒரு ஜீவாத்மா , இது உடலில் கட்டுண்டு இருந்து பிறவி சுழற்சியில் சிக்கி கொண்டு உள்ளது . 
– ஜீவாத்மா பரமாத்மாவை அடைவதே முக்தி , இதை ஒரு மனிதன் தன் செயல் மூலம் அடைய முடியும் அதுவே முக்தி . 
  பிற கடவுளை வழிப்பட்டோ , சில நூல்களை கற்று கொள்வதால் அல்ல , ஒருவனின் செயல் மூலம் . இது காந்தியை மிகவும் கவர்ந்தது . 
– பெரும்பாலான யோகிகள் உலகில் இருந்து துறந்து முக்தியை அடைவது போல் தான் செயலின் மூலம் , மனித சேவை மூலம் , அரசியலின் அந்த முக்தியை அடைய முடியும் என்று அவர் நினைத்தார் . அதுவே அவரின் ஆன்மீக பார்வை . 
 
கீதை என்னும் துணை :
இந்த பயணத்தில் காந்தி தனக்காக எடுத்து கொண்ட துணை என்றால் கீதை நூல் தான் . கீதை ஒரு தத்துவ உரையாடல் , அதில் இருக்கும் பல பகுதிகள் ஒன்றுடன் ஒன்று முரண்படுவது போல தோன்றுவது ஏன் என்றால் , அவை ஒரு ஒரு பகுதியும் மனிதனின் இயல்புக்கு ஏற்றார்போல எழுதப் பட்டுள்ளது . இதை எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய கீதை பற்றி எழுதிய உரையில் குறிப்பிடுகிறார். இந்த தெளிவை காந்தி தன் அனுபவத்தின் மூலம் பெற்றுள்ளார் என்பதை அவர் காந்தி கீதையை அணுகிய விதத்தில் இருந்து உணர முடிகிறது . காந்தி கீதை கர்மயோகத்தை பற்றி சொல்லும் பகுதிகளை மட்டுமே அதன் மைய்ய செய்தியாக கொண்டார் . 
இன்னும் அவர் சொல்வது ‘அந்த 19 ஸ்லோகங்களை தாண்டி சொல்வதுக்கு எதுவுமே இல்லை’ என்றும் ‘கண்ணன் அதற்க்கு பிறகு வந்த பகுதிகளை எழுதி இருக்கவே வேண்டாம்’ என்று குறிபிடுகிறார்.எத்தனை ஆச்சரியமான ஒரு தெளிவு உணமையாகவே கீதை அப்படி அணுகவேண்டிய நூல் தான் . 
கீதையின் ஒரு ஒரு பகுதியும் மனிதர்கள் இயல்பு அறிந்து சொல்லபட்டது . காந்தி தன் இயல்புக்கு ஏற்ப கர்மயோகத்தின் செய்தியை தன் வாழ் நாள் துணையாக ஏற்று கொண்டார்.
 
காந்தி எந்த குரு குலமும் செல்லாதவர் , மரபார்ந்த ஆன்மீக கல்வி கற்காதவர்  தன் ஆன்மீகத்தை தன் அனுபவம் மூலம் சிறிய அளவில் செய்து பார்த்து  உருவாக்கி கொண்டவர் . இந்த நடைமுறை அம்சம் காந்தியை அவர் வாழ்க்கையை உருவாகியது என்று சொல்லலாம் . 
 
காந்தியை சிந்தனை என்று குறிப்பிடுவதைவிட காந்திய செயல் என்று தான் சொல்லவேண்டும் 
Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s