காந்தியும் காதியும்

காந்தியின் அறப் போராட்டத்தில்  காதியின் பங்களிப்பு என்ன ? அரசியல் தளத்திலும் சமூக தளத்திலும் காதி எந்த பங்களிப்பை அளித்தது, இந்த கேள்விகளுக்கு  ஒருவர் பதில் அளிக்க முயன்றார் என்றால் , அவர் கிட்டத்தட்ட  இந்திய தேசிய விடுதலை வரலாறை எழுதிவிடலாம் . அத்தனை முழுமையான ஒரு குறியீடை காந்தி எப்படி தேர்வு செய்தார் ?  அதன் அடிப்படை என்ன ? காதி இந்திய மக்கள் மத்தியில் உருவாக்கிய மாற்றங்கள் யாவை ? என்பதை தெளிவாக முன்மொழியும் ஒரு அபாரமான நூல் பீட்டர் கோன்சல்வேஸ்  எழுதி சமீபத்தில் வெளியாகிய  ‘காதி : காந்தியின் தலைகீழாக்கத்தின் பெரும் குறியீடு ‘ . இந்த நூலின் ஆங்கில தலைப்பு ‘ Khadi:Gandhi’s Mega Symbol of Subversion’ . இந்த இடத்தில் சப்வெர்ஷன் (subversion) என்னும் சொல்லை நான் தலைகீழாக்கம் , புரட்டிப்போடுதல்  என்னும் அளவிலேயே புரிந்து கொள்கிறேன் . காதி எதை புரட்டிப்  போட்டது ?  அது எந்த சமூக பொருளாதார அவலங்களை கேலி செய்தது ?
உடை மனிதர்களால் தேவை சார்ந்து மட்டும் அணுகப்படுவதில்லை . அது ஒரு விதத்தில் அவன் சமூகத்திற்கு தான் யார் என்பதையும் காட்டும் பொருட்டே அணியப்படுகிறது .
இப்படி தான் நான் உடை அணிய போகிறேன் என்று முடிவு எடுப்பது , அபராமான தன்நம்பிக்கையின்  வெளிப்பாடு . என் மேல் இந்த சமூகம் வைக்கும் கட்டுப்பாடுகளின் முதல் இடம் நான்  அணியும் உடை .
அப்படி இருக்கும் போது , ஒருவர் தன் எதார்த்த உடை துறந்து வேறு ஒரு  உடை அணிவது என்பது ஒரு ஆழமான செய்தி .
பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நடைபெற்ற காலம் முழுவதும் , பிரிட்டிஷ் அதிகாரிகள் அவர்கள் நாட்டுக்கு ஏற்ற உடையே இங்கு அணிந்த வந்தார்கள் . இந்த தேசத்தின் சூழலுக்கு  முற்றிலும் உதவாத ஒரு உடை .
இந்திய உடை அணிவதில் இருந்து அவர்கள் அதிகாரப் பூர்வமாக தடுக்கப் பட்டு இருந்தார்கள் . இதற்க்கு ஒரே காரணம் தான் , தன்  உடையின் மூலமாக ஒவ்வொரு நிமிடமும் தான் ஒரு இந்தியனுக்கு மேலானவன் என்ற சுய உணர்வு இல்லாமல் அவனால் இந்த மக்கள் மீது அதிகாரம் செலுத்த முடியாது .  காலனியாதிக்கம் என்னும் திருட்டை சித்தாந்த பூர்வமாக ‘ஒரு ஆங்கிலேயனின் புனித சுமை ‘ என்று நியாயப்படுத்தல் இருந்த காலக்கட்டத்தில் வெள்ளையர்கள்  இந்திய உடை அணிவதின் முரணை உணர்ந்து  தான் அது தடுக்கப் பட்டது.
இதை விட அபத்தம் இந்திய மேல்தட்டு வர்க்கம் கண்மூடி தனமாக ஆங்கிலேய உடையை பிரதி எடுத்தது. பல இடங்களில் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை, ஆங்கிலேய அரசாங்கத்திற்கு வேலை செய்யும் போது  அவர்கள் அந்த உடையை அணிய கட்டாய படுத்தப்பட்டனர்.
காந்தி தனது இளமை காலம் முதலே தன்னுடைய உடைப் பற்றி சமரசம் இல்லாமல் சிந்தித்து வந்தவர். அவர் லண்டனில் தன்னை ஒரு ஆங்கிலேயனை போல் காட்டி கொள்ள கொண்ட முயற்சிகள் பல.
அனால் அவர் அங்கே நிற்கவில்லை, அதில் இருந்து தொடர்ந்து பயணித்து வெள்ளை கதர் ஆடை வரை வந்து , அதில் தன ரத்தம் படிய உயிர் விட்டார் . இது ஒன்றை காட்டுகிறது உடை என்பது வெறும் உடை அல்ல.
காந்தி காதி உடை மூலம் இந்திய மக்கள்  இதயத்தில் பல ஆண்டுகாலமாக வறண்ட கிடந்த  சுய-மரியாதையை கண்டு கொள்ளவே அறைகூவல் விடுத்தார் . அவரை மட்டிலும் ஒரு வேள்வி செயல், ஒவ்வொரு சத்தியாக்ரஹ போராளியும்  செய்ய வேண்டிய ஒரு வேள்வி . தன் சுய அஹங்காரத்தை அழித்து அவிசாக்க வேண்டிய வேள்வி, தன் அறியாமையை   எரித்து அறிவில் ஒவ்வொரு மனிதனும் முழுமை உணரும் கணம். இது எளிதான சவால் இல்லை .
அனால் அந்த கடுமையான பாதையை கடந்த  ஒவ்வொரு மனிதனும் தன்னில் இருக்கும் மாபெரும் ஆற்றலை புரிந்து கொண்டார்கள் . எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுவது போல்   ‘காந்தியின் சாவலை எதிர் கொண்டு சாதனைகள் புரிந்த அசாத்தியமான காந்தியர்கள் பற்றி கதை இல்லாத இந்திய கிராமங்கள் இல்லை . அன்று இந்தியா முழுவதும் 700000 கிராமங்கள் இருந்தாக சொல்கிறார்கள் , இப்படி பறந்து விரிந்த ஒரு நிலப்பரப்பில் மனிதர்களை திரட்டுவது என்பது ஒரு அசாத்தியமான செயல்  . இதில் ஆச்சரியம் என்ன என்றால் காந்தி இதற்க்கு நேர்மையின் பாதையை சமரசம் இல்லாமல் தேர்ந்து எடுத்தார் . எளிதில் மக்களை திரட்ட கூடிய எந்த வழியும் அவர் தேர்ந்து எடுக்கவில்லை . ஒவ்வொரு மனிதம் மீதும் அவர் கொண்டு பெரும் நம்பிக்கையை காட்டுகிறது. இந்த  நம்பிக்கையின் அடிப்படையாக  உள்ளது ஒவ்வொரு மனிதனும் கடவுளின் ஒரு பகுதி என்னும் மாபெரும் தரிசனம் தான் என்று எனக்கு படுகிறது. ஒரு  மனிதனின் அபாரமான ஆற்றலை , சத்தியத்தின் மேன்மையை காந்தியின்  வாழ்க்கை நமக்கு காட்டுகிறது .
காதியும்  , சக்கரமும் மனிதர்களின் கையில் சென்று ஒரு ஆயுதமாயிற்று . பெரும் பீரங்கிகளும் , துப்பாக்கிகளும் கொண்டு நம்மை ஆண்ட ஒரு சாம்ராஜ்யத்தை இந்த எளிய ஆயுதத்தை கொண்டு வெல்ல முடியும் என்பதை காந்தி உணர்த்தினார் . நம்மை எது அடிமையாக்கியதோ அதுவே நம்மை விடுவிக்கும் என்று உணர்ந்து இருந்தார். . இந்திய கிராமங்களை அறப் போர் நிகழும் தளமாக மாற்றினார் காந்தி . தன வீட்டில் அமர்ந்து சக்கரம் சுற்றும் ஒரு விவசாய பெண்மணி பெரும் சாம்ராஜியத்திற்கு எதிரான அறைகூவலை விடுக்கிறார் .
தன் அனுமதியின்றி எந்த ஆயுதத்தை கொண்டும் என்னை அடிமையாக்க முடியாது என்னும் சத்தியத்தின் அறைகூவல் .
இது மட்டும் அல்ல , ஒரு பெரும் மிருகத்தின் கையில் அனைத்தையும் இழந்த எளிய மக்கள் தங்கள் கையால் தான் அணியும் உடையை தானே செய்து கொண்டார்கள் . ஆங்கிலேய ஆடை தொழிற்ச்சாலைகள் வெறும் இந்திய நகரங்களுக்கு மட்டும் ஆடை உற்பத்தி செய்யவில்லை . அவை இந்திய கிராமங்களிலும் அணியப் பட்டு வந்தன . ஏனென்றால் இந்திய நகரத்திற்கு மட்டும் ஆடை உற்பத்தி செய்தால் வெறும் பத்து  சதவீத மக்களை   மற்றுமே சென்று அடைய முடியும்  . இதை ஆங்கிலேயர்கள் நன்கு அறிந்து இருந்தார்கள் . இந்தியர்களின் உடை உடுத்தும் முறை பற்றி விரிவான புத்தங்கள் எழுத பட்டன என்று கோன்ச்லவேஸ் குறிப்பிடுகிறார் . இந்த நூல்கள் எழுதப் பட்ட பத்து  ஆண்டுகளில் இந்தியா இறக்குமதி செய்து ஆடையின் அளவு கிட்டத்தட்ட நூறு  சதவீதம் உயர்ந்தது . இது இந்திய கிராமங்களின் பொருளியலை  முற்றிலும் அழித்தது  . ஒரு காலத்தில் உலகுக்கே உடை அளித்த மக்கள் நூறு ஆண்டுகளில் முற்றிலும் தங்கள் உடைக்கே வழியில்லாமல் அம்மணமானார்கள் . காந்தி காதி – சக்கரத்தை மீண்டும் புத்துயிர்  அளிக்க முயர்ச்சிக்கையில் அதை பற்றி தெரிந்தவர்களே இல்லாத நிலை தான் இருந்தது. பல கிராமங்களில் காதி சக்ரா வீட்டு பரண்களில் முடங்கி விட்டன.காதியின் மீட்பு அதன்  பயன் இந்திய கிராமங்களில் ஒரு பொருளியல் மாற்றத்தை நிகழ்த்தியது . கடுமையான வறுமையில் வாழ்ந்த எளிய மக்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமைந்தது. இந்த மாற்றங்கள் காலனியாதிக்கத்தின் பொருளியல் அடிப்படையை ஆட்டம் கொள்ள செய்தது .
இந்திய சமூக சூழலில் உடை எனபது ஒரு சாதியுடன் தொடர்பு கொண்டதாகவே இருந்தது . அணைத்து இந்திய மக்களும் கதர் ஆடை அந்நிய வேண்டும் என்பது அவர்கள் தங்களுக்குள் இருக்கும் சாத்திய வேறுபாடுகளை  களைய வேண்டும் என்னும் அறைகூவல் தான் . இது மக்கள் மத்தியில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது என்பதை காந்திக்கு வந்த பல கடிதகள் முலமாக அறிய முடிகிறது . பலர் காதி அணிய மறுத்தார்கள் ஏனென்றால் அந்த உடை அவர்களை கீழ் சாதிகளுடன் அடையாளப் படுத்துவதாக அஞ்சினார்கள் . காதி விற்பனை  கீழ் சாதி சேர்ந்த ஏழை விவசாயிகளுக்கு ஒரு வேலை உணவை நிரந்தரப்  படுத்தியது .
இப்படி பல தளங்களில் தன்னுடைய பங்களிப்பை ஆழ்த்திய காதியை  அன்றைய படித்த வர்க்கம் புரிந்து கொள்ளவே இல்லை
காந்தி காலத்து சமகால இடதுசாரி சிந்தனையாளர்கள் காதியின்  பொருளியல் பங்களிப்பை கண்டுகொள்ளவே இல்லை . அவர்கள் காதி நாட்டின் வளர்ச்சியை  தடுத்து விடும் என்றே கருதினார்கள் . காந்தி வளர்ச்சி என்பதை இந்த நாட்டின் அடிப்படை எதார்த்தத்தில் இருந்து பெற்று கொண்டு இருந்தார் . அவரை பொருத்தவரை இதுவே வளர்ச்சி .
காந்தியை பொருத்தவரையில் அவருக்கு மேலே சொல்லப் பட்டுள்ள பயன்களை தாண்டியும் , காதி அன்றைய இந்திய சூழலில் சத்தியத்தின் வழி , அஹிம்சையின் வழி. பிற பலன்களை கணக்கில் கொண்டு செயல்ப்படுபவர் அல்ல காந்தி , அவருக்கு அதுவே சரி . அந்த சத்திய செயல்ப்பாடு அதற்கே உண்டான பலன்களை கண்டு கொண்டது . காலம் தோறும் இதுவே சத்தியத்தின் வழி என்று படுகிறது .
ஒரு ஞானி தன்  முழுமையான வாழ்க்கையின் மூலமாக முழுமையான தீர்வுகளை நோக்கி இட்டுச்செல்வார்.
இன்று நாம் சந்திக்கும் அரசியல் சமூக சாவல்களை சந்திக்க காந்தியின் வழியே உகந்ததாக படுகிறது
நம்முடைய காதியை  நாமே கண்டு கொள்வோம் , சத்தியத்தின் விளக்கை கொண்டு .

 

Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s