ஆரோகிய நிகேதனம் – மரணத்தின் எல்லை இல்லா விளையாட்டு

உலகின் தலை சிறந்த நாவல்கள் காலத்தை அதன் பேசு பொருளாக கொண்டுள்ளன.நாவல் என்னும் கலை நேற்றும்-இன்றும் சந்திக்கும் இடத்தில் நிகழ்கிறது.பெரும் நாவலாசியர்கள் மரபான சிந்தனையின் மீது அறிவியல் நிகழ்த்தும் தாக்குதலை பதிவு செய்து இருகிறார்கள். ஆரோகிய நிகேதனம் இந்த கால மாற்றத்தின், நவீனமும் பாரம்பரியமும் மோதிக்கொள்ளும் சித்தரிப்பே இந்த நாவல். அப்படியும் சொல்ல முடியாது ! மனிதர்கள் பிறக்கிறோம் இறக்கிறோம் நீண்ட நெடிய கால நதியில் வெறும் ஒரு துளி தான் நம் வாழ்க்கை அனைத்துமே.இன்று எனக்கு நெருங்கியவர்கள் பலர் வயது முதிர்ந்து இறப்பார்கள்,நான் சில வருடங்கள் கழித்து மறிப்பேன் .இது ஒரு பெரும் விதி , மரணம் நாம் பிறக்கும் போதே நம்முடன்  பிறந்து விடுகிறது. இதுவே நம் மரபு ஆயிரம் வருடங்களாக  மரணத்தை பற்றி கூறும் சாராம்சம்.இன்றும் இந்த கேள்வி கேட்டு  கொண்டே தான் இருக்கிறோம் ? ஏன் பிறக்கிறோம், எது மரணம் இவையே என்றும் மனிதனின் மிக பெரிய அலைகழிப்புகள்.
ஆரோகிய நிகேதனத்தின் மையம் ஜீவன் தத் , இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். வயது முதிர்ந்த இவர், நடந்து சென்று நோயுற்று இருப்பவர்களின் நாடியை பார்த்து ரோக நிர்ணயம் செய்கிறார்.வயது முதிர்ந்தவர்களுக்கு மரணம் வரும் செய்தியை கூறும் கவிராஜ் மருத்துவர். ஜீவன் ரஜோகுணம் கொண்டவர், பெரும் செல்வமும் பேரும் புகழும் சம்பாதித்து வாழ ஆசைப்படும்  இளைஞராக  இருந்தவர்.சந்தர்ப்ப சூழ்நிலை அவர் வாழ்க்கையை மாற்றி விடுகின்றன. தன் இளமை காலத்தின் காதல் தோல்வி அவரை காய படுத்தி  விடுகிறது. அகங்காரம் சீண்ட பட்டவராய் இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறார்.அவர் மணந்த பெண்ணின் பெயர் அத்தர் பெள, அவள் உடனே கண்டு கொள்கிறாள் ஜீவனுக்கு தன் மேல் அன்பு இல்லை என்று. அவள் ஒரு பகடை காயாக கையாளப்படுவதை நினைத்து மனம் நொந்து போகிறாள்.அத்தர் பெள முற்றிலும் ஜீவனை வெறுக்கிறார், அவள் பேசும் வார்த்தைகள் தொடர்ந்து ஜீவனை வருத்துகிறது.
ஜீவனின் வாழ்க்கை ஒரு பாலத்தின் மீது நிற்கும் மனிதனை போன்றது, அவரின் தந்தையை போல் முற்றிலும் சாத்விகமாக ஒரு ஆயுர்வேத மருத்துவராக அவரால் இருக்க முடியவில்லை.அவர் ஒரு நோயாளிக்கு மரணம் வரும் என்று சொல்லும் பொது அவரின் ஆணவம் சற்று தலை தூக்குகிறது.
தன் சொந்த மகனுக்கே இதை சொல்லும் நிலைமை வருகிறது, இந்த மனப் போராட்டம் இவரின் ஆதார ரஜோகுனத்தால் ஏழும் மன கொந்தலிப்பு. இதை விட்டு விடும் படி ஜீவனின் தந்தை மரணத்தின் தருவாயில் கூறுகிறார். எவ்வளவு தான் முயற்சி செய்தும்   பார்த்தும் முடியவில்லை.
ஒரு நவீன மருத்துவனாகவும்  இருக்க முடியவில்லை.இந்த மனப் போராட்டம் அவர் வாழ்க்கையின் மிகப் பெரிய பிரச்சனை. தன் காதலியின் மேல் உள்ள கோபம், அஹங்காரம் சீண்ட பட்ட அவரின் மனம் தொடர்ந்து வருந்துகிறது. தன் வாழ்நாளில் ஒரு குறை என்றும் நீடிப்பதை அவர் உணர்கிறார். 
நாவலின் தொடக்கம் ஜீவன் வாழும் கிராமத்தில் நவீன மருத்துவத்தின் காலம். அவர் குடும்பம்  மரபாக செய்து வந்த  ஆயுர் வேத மருத்துவதிர்க்கு சவால் விடுகிறது நவீன மருத்துவம். முக்கியமாக பிரத்யோத் என்ற இளம் மருத்துவர், ஜீவனின் ஆயுர்வேதத்தை அரை-குறை மருத்துவம் என்று கண்டிக்கிறார்.ஜீவன் மரணம் நிகழப் போவதாய் கூறியவர்களை தன் மருத்துவமனையில்  சேற்று சிகிச்சை அளிக்கிறார்  . ஜீவன் இதனால் அதிகம் சீண்ட படுகிறார் , தான் குறி சொன்ன சிலர் இறக்கும் பொது உள்ளூர அவர் மனம் சந்தோஷ படுகிறது.இப்படி இரு வேறு உலகியல் பார்வைகள், ஒன்று ஜீவனுடையது பாரம்பரியாமான மரணத்தை ஒரு வாக்கியத்தின் முடிவு என்று எடுத்து கொண்டு அதை ஏற்று கொள்ளும் பார்வை.
பிரத்யோத் இதற்க்கு முற்றிலும் மாறாக தன் நவீன சிகிச்சை முறையை கொண்டு நோயுடன் மோதிடுகிறான் . நோயும் , மரணமும் அவரை பொறுத்தவரை வெல்ல வேண்டியவை. ஜீவனை  பொறுத்தவரை மரணம் அவர் தந்தை கூறும் படி, ‘பிங்கள கேச தேவதை’ வாழ்வில் இருந்து முக்தி தர வரும் தேவதை . அவளின் வருகை பார்த்து மனிதன் பயப்பட தேவையில்லை.ஜீவனின் சிகிச்சை முறை ஒரு முழு உயிரை அந்த உடல் மற்றும் ஆத்மாவை கணக்கில் கொண்டு  செய்ய படவேண்டியது , மரணத்தை எதிர்த்து செய்யப் படுவது அல்ல ஆயுர்வேதம். மாறாக வாழ்வுக்கும் – சாவுக்கும் இடையேயான ஒத்திசைவை உருவாக்குவது. ஜீவன் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் பல முறை கூறுகிறார் ‘மரணத்தை எதிர்த்து யார் என்ன செய்ய முடியும்  ?’. பிரத்யோதின் நவீன சிகிச்சை முறை ஒரு உடலுக்கு செய்ய படும் சிகிச்சை.மரணத்தை தடுக்க தன் முழு உழைப்பாலும் போராடும் குணமே அதன் இயல்பு.
இந்த இருவரும் மோதி கொள்கிறார்கள். ஒரு  கட்டத்தில்  ஜீவன், நவீன சிகிச்சை மானுட இனம்  இந்த இயற்க்கைக்கு விடும் சவால் , அவனின் ஆதார இயல்பின் ஒரு பகுதி என்று உணர்கிறார். பிரத்யோத் ஜீவனின் சென்ற கால மருத்துவத்தை, அதன் முழுமை பார்வையை புரிந்து கொள்கிறார்.
இவர்கள் இருவரும் சமன் செய்து கொள்ளும் நிகழ்ச்சி , ஜீவனின் இளமை காதலி தான் பிரத்யோதின் மனைவியின் வயது முதிர்ந்து பாட்டி . அவளுக்கு நாடி பார்க்கும் பொது தன் அஹங்காரத்தின் அற்ப தனத்தை உணர்கிறார் . ஜீவனின் தந்தை சொல்லும் படி மனிதர்கள் காம குரோத உணர்வுகளால் தவறு இழைத்து விடுகிறார்கள் . அவர் , இளமையில் அவளை ஏமாற்றிய மஞ்சரி, அனைவரும் மனிதர்கள் தவறு இழைக்கும் மனிதர்கள் . அந்த இடத்தில் ஜீவனின் முக்தி , தன் நாடியை பார்கிறார் மரணம் , அந்த பிங்கள கேசர தேவதையின் வருகையை உணர்கிறார் .
நாவல் முழுவது அபாரமான படிமங்கள் , ஜீவன் மெல்ல நடந்து செல்லும் காலடி ஓசை மரண தேவதையின் வருகையே.அவர் உடல்களின் நாடியில் ஊறி இருக்கும் மரணத்தை நாவல் முழுவதும் கண்டு கொள்கிறார்.இந்த நாவல் தோறும் எவ்வளவு வேறு வேறு மனிதர்கள் , வேறு-வேறு மரணங்கள் . ஜீவன் ஒரு இடத்தில் தன் மனம் வற்றி போன ஒரு கடல் என்கிறார் , இதை தன் மனைவி கூட கண்டு கொள்ள வில்லை.அத்தர் பெள ஜீவனுக்கு இடையே இருக்கும் இடைவெளி , ஜீவனின் வாழ்க்கை தோறும் அவர் செய்யும் ரோக நிர்ணயங்கள் . இந்திய நாவல்களில் ஒரு உச்சம் –  இந்த நாவல்.
Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s