சீத்தாபழம்

வாயின் உட்பகுதி , இடது கன்னம் பற்களுடன் இணையும் இடம் வீங்கி விட்டு  இருந்தது. அதி காலை முதலே நல்ல வலி, வாய் உலர்ந்து போய்   , தாகம் தவிட்டுகிறது . சனியன் எல்லாம் இந்த சீத்தாபழத்தினால் வந்தது. நேற்று காய் வங்கி வரும் பொது அரை கிலோ சீத்தாபழம் வாங்கி  வந்தேன், முப்பது ரூபாய் . ஒரு பழம் வீட்டுக்கு போகும் முன்னரே சாலையில் அமர்ந்து சாப்பிடலாம் என்னும் அளவுக்கு பழுத்து இருந்தது. வீட்டுக்கு போன உடன் மேஜையில் வைத்து விட்டு கை கால் அலம்பி வரும் முன்னமே உதயா  அந்த பழத்தை சாப்பிட ஆரம்பித்து  விட்டால். பெருந்தமையுடன் அவளிடம் இருந்து  ஒரு கால் பழத்தை மட்டும்  வாங்கி  சாப்பிட்டேன், ஆனாலும் ருசி மனசை விடவில்லை, இன்னொரு பழத்தை எடுத்து சாப்பிட தொடங்கி  விட்டேன் . அது பழுக்கவே இல்லை .
சீத்தாபழம் ஒரு  விசித்திரம் ,  பழத்தில் இருக்கும் முக்கால்வாசி பகுதியை உன்ன முடியாது . கொட்டையில்  ஒட்டி கொண்டு இருக்கும் சிறு சதையை சப்பி எடுத்து விட்டு , கொட்டையை  லாவகமாக துப்ப  வேண்டும் .
பழுக்காத பழங்களில் சதை  சீக்கிரமாக வெளி வராது .  உறிஞ்சு இழுக்கும் பொது கொட்டை வாயின் உர்ப்பகுதியில்  குத்தி விட்டது . அதனால் வந்த வினை தான் இந்த வலி . சீத்தாபழதை  நேற்று இந்த அளவுக்கு கற்பழித்து இருக்க  வேண்டாம் , அரிசி டின்ல வெச்சு இருந்தா நல்லா பழுத்து இருக்கும்.
இந்த உடலில்  வலி இல்லாமல் இருப்பது என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கோளேன் . இப்போ ஏன்  வலிகருதுனா கடவா பல்லு கன்னத்தோட உறசறது, ஏன்னா கன்னம் வீங்கி இருக்கு. இப்போ இந்த அண்ட பிரபஞ்சம் நம்ம  எல்லோரும் பிறந்து வந்தது  எல்லாமே ஒரு விபத்து தான் சொல்றா , அப்டினா  நம்ம உடம்பு இதவிட ஒரு மோசமான ஒண்ணா  இருந்து இருக்கலாம் . யோசிச்சு பாரு எல்லா மனிதனுக்கும் தினம் இரண்டு மணி நேரம் வயிறு கண்டிப்பா வலிக்கும் என்று இருந்து இருக்கலாம் , விபத்து தானே . இப்படி ஒரு கனகச்சிதமான விபத்தை யோசித்து கூட பார்க்க முடியவில்லை . சந்தோசம், துக்கம், , காதல் , கலை இவை அனைத்துமே வெறும் விபத்து . ஒரு தர்ச்செயல் நிகழ்ச்சி . உலகத்தில் வாழும் நாம் அனைவருமே 10 நிமிடத்திற்கு ஒரு முறை எழுந்து குதிக்க வேண்டும் , “ஐய்யா  நான்   இருக்கின்றேன் !” …. நினைத்து பாருங்கள். நான் மட்டும் கடவுளாக இருந்தால் என்னிடம் மக்கள் குறை கூறுகிறார்கள் என்றால் இதையே சொல்லுவேன் “ஒன்னும் கவலையில்லை நான் வேண்டும் என்றால் காலத்தில் பின்னால் போய் உயிர்களே இல்லாமல் ..பார்த்துகிறேன் ” .
சீத்தாபழம் சாப்பிட்டால் இதயம் வலிமை பெரும் என்று சொல்கிறார்கள் . பொறுமை வளரும் . என் நண்பன் நான் பழத்தை சாப்பிடுவதை பார்த்து சொன்னான் , நீ செய்வதை என்ன வென்றே சொல்ல முடியவில்லை . அரை மணி நேரமாய் ஏதோ செய்கிறாய் பழத்தின் பாதி பகுதியை துப்பி விடுகிறாய் .
Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s