வாழ்க்கை தன் அளவில் முழுமையானது

பல பிரச்சனைகளுக்கு உள்ளே தெருவில் நடந்து செல்லும் போது. ஏதோ சிந்தனையில் தொலைந்து போய் சென்று கொண்டு இருப்பேன்.சட்டென்று சிறு குழந்தைகள் ஓடி செல்வதை காண்பது , என் எல்லா சோகங்களையும் அர்த்தமிழக்க செய்யும்.வாழ்க்கை நாம் நினைக்கும் அளவுக்கு சிரமமானது இல்லை என்று சொல்லும் அந்த துள்ளல் நடை குழந்தைகளுக்கு.ஒரு மாபெரும் மன எழுச்சி , அப்படியே பார்த்து கொண்டே இருப்பேன் . ஆனந்தம் கரைபுரண்டு கண்ணீராய் வெளிப்படும் தருணம் .
அவர்களுக்கு எதுவும் பெரிய விஷயம் இல்லை , இந்த நொடியில் முழுமையாக வாழும் ரகசியம் குழந்தைக்கு மட்டும் தான் இயற்கையால் வழங்க பட்டுள்ளது . ஏதோ ஒரு வயதில் அதை நாம் இழந்து விடுகிறோம்.ஜெயமோகன் தன்னுடைய பல கட்டுரைகளில் வாழ்க்கை பற்றி கூறும் போது ஒரு வரி, “வாழ்க்கை தன் அளவில் முழுமையானது” என்று ‘ எவ்வளவு நிஜமான ஒரு அவதானிப்பு.
மாபெரும் உலக இலக்கியமான போரும் அமைதியும் புத்தகத்தில் இப்படி ஒரு இடம் வருகிறது , அன்ட்ரூ  வாழ்கையின் பல சோகங்களை சந்தித்தவன் , தன்னுடைய இளம் மனைவி இறந்த  பிற்பாடு ,  ஒரு மிக பெரிய வெறுமை உணர்வு சூழ வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.தற்செயலாக ஒரு விருந்தில் நடாஷா என்று ஒரு தேவதை போன்ற பெண்ணை சந்திக்க நேர்கிறது.இவன் தங்கி இருக்கும் அறைக்கு நேர் மேல் அறையில் நடாஷா தன்னுடைய தோழியுடன் இரவில் பேசி கொண்டு இருக்கிறாள்.அன்ட்ரூ தூக்கம் வராமல் இருக்கும் காரணத்தால் இவர்கள் பேசுவதை கேட்கிறான்.நடாஷா தன் தோழியுடன் அன்று , அந்த கரிய இரவில் வெண்மையே உருவான  மிகவும் பிரகாசமான முழு நிலவின் அழகை வர்ணிக்கிறாள் . அவள் கொள்ளும் மன எழுச்சியின் உச்சத்தில்,  கூறும் வரிகள்
“இந்த நிலவை பார் , இந்த ஜன்னல் மேல் நின்று வான் நோக்கி குதித்தால் நிலவை தொட்டு விட முடியுமல்லவா ?ஒரு நாள் இதை அன்ட்ரூ பார்க்க நேரும் , அவன் சோகங்கள் மறைந்து அவன் மீண்டு சிரிக்க நேரும் ?”இதை கேட்டு கொண்டு இருக்கும் அன்ட்ரூ , அவளை சந்திக்க நேரும் போது கேட்கிறான் , உன்னால் எப்படி எப்போதும் வாழ்க்கையை முழு உயிர்ப்போடு வாழ முடிகிறது ?
இதை போன்ற ஒரு காட்சி , கரைந்த நதி நாவலிலும் வருகிறது , ரமேஷ் சந்திரன் மிக பெரிய வேலை சிக்கல்களில் மூழ்கி சாலையில் நடக்கும் போது ஓடி வரும் ஒரு சிறுமியை காண்கிறான். இந்த நொடியை இவள் அளவு தீவிரத்துடன் வாழு முடியுமா என்று உவகை கொள்ளுகிறான்.
Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s