மலர் மாலை தேசம்

இன்று உதயாவிடம் பேசி கொண்டு இருந்தேன் , அப்போது அவள் சொன்ன விஷயம் ஆச்சரியம் அளித்தது . அமெரிக்காவில் இருக்கும் அவள் அண்ணனுக்கு தீபாவளிக்கு விடுமுறை இல்லை என்று சொன்னால் . அமெரிக்கா ஒரு கிருத்துவ தேசம் என்பது சட்டென்று புத்தியில் உரைத்தது ,
அதன் அரசாங்க அமைப்பு கிறித்துவ அடிப்படையில் அமைந்தது . உழைக்க யார் வேண்டுமானாலும் அங்கே செல்லலாம் , அவர்கள் ஒரு போதும் அமெரிக்கர் அல்ல , அமெரிக்க வாழ் இந்தியர்கள் , இல்லை இந்திய வம்சாவழியினர் அவ்வளவே . மாறாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கே பல்புடுங்க வந்த சீனர்கள் இந்தியரகளாகவே வாழ்கிறார்கள் .

வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா இந்தியா ஒரு salad தேசம் என்கிறார் . மாறாக இந்த தேசம் ஒரு மலர் மாலை போன்றது , அந்த மாலையை தொடுக்க பயண பட்ட அனைத்து மலர்களும் தன் இயல்பை இழப்பதில்லை . மாலை என்று ஒரு தொகுப்பு வடிவமும் இந்த தேசத்துக்கு உண்டு .

இந்த நாட்டின் இரண்டு விஷய்னகளுக்காக நான் பெருமை படுவேன் , ஒன்று பல்வேறு மதங்கள் வாழும் இந்த நாடு , எல்லா மதங்களுக்கும் சம உரிமை அளிக்கும் அரசியில் சாசனம் . இந்த நாட்டு மக்களின் பெரும்பான்மையினர் பிற மத நம்பிக்கைகளை மதிப்பவர்கள் .

இன்னொன்று , இங்கே செயலில் இருக்கும் ஜனநாயகம் . கடந்த அறுபது ஆண்டுகளில் நாம் ஒரு செயல்படும் அரசியல் ஜனநாயகமாக இருக்கிறோம் . இந்த நாடு சுதந்திரம் அடைந்த முதல் நாளில் இருந்தே அனைவருக்கும் சம உரிமை அளித்து – அனைவருக்கும் ஒரு வாக்கு .
இது ஒரு சாதனை தான் . பிற எந்த தேசத்திலும் செய்யபடாத ஒன்று .

இரு பெரும் மனிதர்களை இங்கு எண்ணி பார்கிறேன் ,

நேரு போன்ற ஒரு தீர்கதரிசி நமக்கு கிடைத்தது ஒரு பெரும் வர பிரசாதம் . இந்தியா ஒரு ஹிந்து பாகிஸ்தானாக கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்தவர் நேரு . அவர் வாழ்நாள் முழுவதும் மத-நளினகத்தின் முகமாக செயல்ப்பட்டார். அவர் தான் நவீன இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளை கட்டி எழுப்பியவர் . அவரின் செல்வாக்கில் யார் இருந்தாலும் இந்தியாவில் ஒரு சர்வாதிகாரத்தை நிருவ-முயற்சித்து இருப்பார்கள் . ஒரு கால கட்டத்தில் கூட தன் மக்கள் செல்வாக்கை தவறாக பயன் படுத்தியவர் அல்ல நேரு . ஜனநாயக விழிமியங்களை மதித்தல் , இந்த நாட்டில் உள்ள சிறுபாண்மை சமூகங்களின் உரிமையை காப்பதில் அவர் ஆற்றிய பங்கு என்பது மிக முக்கியமானது . அதனால் தான் இந்தியாவின் பன்முக தன்மையை அழிக்க செயல்படும் ஹிந்துத்வா அமைப்புகள் இன்றும் கூட அவரை கடுமையாக தாக்குகிறார்கள் .

அம்பேத்கார் போன்ற ஒரு scholar நம் அரசியல்அமைப்பு சட்டத்தை வடிவமைத்தது இன்னொரு வரபிரசாதம் . இந்தியா போன்ற முரண்பாடுகளை சுமந்துள்ள ஒரு நாட்டில் , இன்னும் நவீன சிந்தனைகள் வேர் பிடிக்காத ஒரு கால கட்டத்தில் , அவர் முக்கியமான சட்டங்களை கொண்டு வந்தார் . ஆனால் அதனை மக்கள் மன்றத்தில் எடுத்து செல்ல நேரு தேவைப் பட்டார் .

இவர்கள் இருவரையுமே தேர்வு செய்ததில் காந்திக்கு பெரும் பங்கு உண்டு .

Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s