பருவம் நாவல்

மகாபாரதம் நாம் அனைவரும் கேட்ட  கதை தான் , இந்த மண்ணில் வாழும் அனைவரும் ஒரு முறையாவது கேட்டு இருப்பார்கள் , இன்று மகாபாரதம் ஒரு புராண கதையாக நமக்கு கிடைகிறது . கடவுள்கள் , வரங்கள் , சாபங்கள் நிறைந்தது இந்த புராணம் . கண்டிப்பாக காலம் தோறும் மகாபாரதம் மாறி வந்து இருக்கும் . புது புது கிளை கதைகள் இணைந்து இருக்கும் , காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கும் .
மகாபாரதத்தின் காலம் எனபது இந்தியா ஒரு பழங்குடி சமூகத்தில் இருந்து மேல் எழுந்து ஒரு நில உடமை சமூகமாக மாறும் கால கட்டம் . பெரும் அரசர்கள் உருவாகும் ஒரு காலத்தை காட்டுகிறது . அதற்கே உண்டான அற விழிமியங்களை பற்றி பேசுகிறது .  பெரும் தெய்வங்களான சிவனும் விஷ்ணுவும் உருவாக தொடங்கி உள்ள காலமாகவே பார்க்க முடிகிறது .  ரிக் வேத காலத்தில் அக்னியும் , இந்திரனும் தான் பெரும் தெய்வங்கள் . விஷ்ணு என்று நாம் இன்று அறியும் கடவுள் மூன்று தனி நம்பிக்கைகள் உள்ளிழுத்து கொண்டு உருவானது . எஸ் . எள் ப்ய்ரப்பா இந்த மகாபாரத கதையை அதன் புனித தன்மையை கலைத்து விட்டு ஒரு வரலாற்று நிகழ்வாக , ஒரு நாவலாக எழுதி இருக்கிறார் .
பருவா என்று கன்னடத்தில் வெளியான இந்த புகழ் பெற்ற நாவல் தமிழில் பருவம் என்று பாவண்ணன் அவர்காளால் மொழி பெயர்க்க பட்டுள்ள ஒரு மாபெரும் நாவல் .
கதை தொடங்கும் காலம் மகாபாரத யுத்தம் நிகழ உள்ளது . அதற்க்கான தயாரிப்பு ஏற்பாடுகளில் பாண்டவர்களும் , கௌரவர்களும் இருக்கிறார்கள் . முக்கியாமான கதை மாந்தர்கள் குந்தி , பீமன் , திரௌபதி , அர்ஜுனன் , யுயதனன் , பீஷ்மர் , துரோணர் போன்றவர்களின் என்ன ஓட்டங்களால் முன்னகர்கிறது .
நாவல்  நாம் மரபாக அறிந்துள்ள தகவல்களை மறு அமைப்பு செய்கிறது. உதாரணமாக பாண்டுக்கு  குழந்தை இல்லாததற்கு காரணம் அவன் ஆண்மையை இழந்தது தான் அன்றி முனிவரின் சாபம் இல்லை . குந்தி வரம் வாங்கி குழந்தை பெற்று கொள்ள வில்லை , நியோக முறையில் இன்னொரு ஆணுடன் உறவு கொண்டே பிள்ளைகள் பெற்று எடுக்கிறாள் . குந்திக்கு நியோகம் செய்யும் ஆண்கள் தேவர் லோகம் என்னும் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் வானத்தில் இருந்து வரும் தேவர்கள் அல்ல . இதை போல் நாம் தெரிந்த தகவல்களை மறு புரிதலுக்கு உண்டாக்கும் இந்த நாவல் .
திரௌபதி எப்படி ஐந்து ஆண்களை மணந்து கொண்டால் , அவள் எப்படி அவர்களுடன் உறவு கொண்டால் போன்று விஷயங்களை புனைவின் சாத்தியங்களுடன் எழுதி உள்ளார் . இந்த நாவல் நடைமுறை எதார்த்தத்தை பற்றி பேசும் இடங்கள் பெரும் நம்பக தன்மையுடன் எழுத பட்டுள்ளது .
கதையின் கதாபாத்திரத்தின் உளவியல் அமைப்பை விவரிக்கும் இடங்களில் , அவர்கள் நமக்கு நெருங்கிவிடுகிரார்கள் . பீமன் தர்மன் பகடை விளையாடியதை கடுமையாக கண்டிக்கிறான் . அவன் வாயிலாக நமக்கு கதை விவரிக்க  படும் போது நாமும் அந்த கோபத்தை உணர்கிறோம் . பிறகு அதை அர்ஜுனன் அவன் தரப்பு நியாயங்களுடன் விளக்குகிறான் . இப்படியே பலரின் வாக்குமுலமாக கதை நகர்கிறது . அவர் அவரின் மனசாட்சி பேசும் நியாயங்கள் .
யுத்தம் முடியும் பகுதி ஒரு மிக பெரிய உணர்ச்சி பிரளயம் வெடிக்கிறது எல்லோர் மனங்களிலும் .
எங்கு பார்த்தாலும் பிணங்களை திங்கும் கழுகுகள் , ஓநாய்கள் , உடைந்து போன தேர்கள் , குதிரைகளின் சடலம் என எங்கு பார்த்தாலும் அழிவின் கோர முகங்கள் . இப்படி ஒரு அழிவை யாரும் பார்த்ததில்லை . கதை முடியும் தருணத்தில் கண்ணன் காந்தாரியை கண்களின் கட்டை அவிழ்த்து விடுகிறான் . அவளை கூட்டி கொண்டு யுத்த களத்துக்கு கூட்டி செல்கிறான் அவள் எதை பார்க்கிறாள் தன் மகன்கள் உருவாகிய அழிவை பார்த்து அஞ்சுகிராளா அவள் ? ஏன் மறுபடியும் கண்களை மூடி கொள்கிறாள் . நாவலின் முடிவில் மிக பெரிய ஒரு தனிமை உணர்வை கொண்டேன் . பாஞ்சாலியின் ஐந்து மகன்களும் கொல்லபடுகிறார்கள் . அதை பார்த்து பாஞ்சாலி கதறும் போது இந்த யுத்தத்தால் அதிகம் பாதிக்க பட்டவர்கள் பெண்கள் தானோ . அதன் வடுக்களை சுமந்து இந்த பூமி எனும் பெண்ணும் காலத்தில் முன்னகர்கிறாள் . ஒரு பெரும் மழை அச்தினாவதியை அதன் அசுதங்களில் இருந்து சுத்தம் செய்கிறது . மனிதனின் குரூரத்தின் சாட்சியாக அந்த யுத்தம் காலம் தோறும் மனிதர்களால் சொள்ளபட்டுவருகிறது .
Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s