பிறவி பலன் (நகைச்சுவை)

என் தங்கையின் facebook தளத்தை பார்த்து விட்டு உதயா என்னிடம் கேட்டா ‘யாரு பா ஜெயஸ்ரீ கண்ணன் ‘
அதுக்கு நான் ‘தெரிலையே பா யாருன்னு !  ஏன் கேக்கற ? ‘ .
அவள்  ‘அவங்க உன் சொந்தகாரங்க பா ‘  .
‘அப்படியா வேற பேருல தெரிஞ்சு வெச்சிருப்பேன் ‘ என்றேன் .
‘அவங்க அப்பா பேரு சடகோபன் , அம்மா பேரு ராஜலக்ஷ்மி ‘ என்றால் .
சட் என்று ஞாபகம் வந்தது ‘ அட நம்ம பாபுஜி ‘ அது என்ன அப்படி ஒரு பேரு என்று கேட்க வேண்டாம் . பட்ட பெயர்களுக்கு காரணம் தேவை இல்லை . சில நேரங்கள் அவர்களுக்கே உண்மையான பெயர்கள் மறந்து போகும் அளவுக்கு பட்ட பெயர்கள் சக்தி வாய்ந்தவை .
என்ன ஓட்டங்களை குறிக்கிட்டு உதயா கேட்டால் ,
‘அவங்க நம்ம நிச்சயத்துக்கு வந்தாங்களா ? ‘
‘இல்லை , அவங்க அப்பா வந்தார் , அவர் எனக்கு மாமா தாத்தா , அவரை கோபு தாத்தா என்று அழைப்போம்  .  ‘பாபு பாபு பாபு எங்கே , பாபு அப்பா கோபு எங்கே ‘ பாடல் கூட பிரசித்தம் ‘ உதயா வாய் விட்டு சிரித்து விட்டால் .

கோபு தாத்தா கொஞ்சம் முன்கோபி , கல்யாணங்களில் தன்னை ‘வா’ என்று சொல்ல வில்லை என்று அதிக முறை கோபித்து  கொண்டவர்களில்  முக்கியமானவர் .
எங்கள் சோழியா கிண்க்டோமில் நிச்சயங்கள் நிகழ்ந்தால் லக்ன பத்திரிக்கையை இவர் தான் செரி பார்ப்பார் . அந்த சங்க பலகை அவருக்கு மட்டுமே உரித்தானது .
நான் சின்ன பையனா இருக்கும் போது , தாத்தா பாட்டி தஞ்சாவூரில் இருந்தார்கள் . பள்ளி விடுமுறை நாட்களில் அங்கே சென்று விடுவோம் . தென்னை மரம் , பலா  மரம் சூழ அமைந்து இருக்கும் அழகான வீட்டில் இருந்தார்கள் .
அடிக்கடி இளநீர் , பறிக்க பட்ட தேங்காய்களை திருவி அதில் இளசான தேங்காயில் சர்க்கரை போட்டு சாப்பிட்டு , தினமும் மூன்று முறை ‘கேளடி கண்மணி’ பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டு காலத்தை கழிப்பேன் (தாத்தா வீட்டில் ஒரே ஒரே ஒரு கேசட் தான் இருந்தது ) . அங்கே விளையாட பசங்களே கிடையாது , வீட்டு மதில் சுவரில் அமர்ந்து சாலைகளில் போறவர்களை பார்க்கலாம் . தாத்தா வீடு திரும்பும் போது பாம்பே  ஸ்வீட்சில் முந்திரி பேடா ஒன்று வாங்கிவருவார் . சீக்கிரமே தூங்கி காலையில் நேரம் கழித்து எழுந்தால் கொஞ்சம் தாங்கும் .

அப்படி ஒரு நாளில் கோபு தாத்தா அங்கே வந்தார்  , அவருடைய கரிய முகத்தில் பட்ட நாமம பறக்க சாத்திண்டு   கம்பீரமாய் தோற்றம் அளித்தார் . நான் வீட்டு கூடத்தில் அமர்ந்து கொண்டு , தேங்காய் சக்கரை கலந்து சாப்பிட்டு கொண்டு இருந்தேன் . என்னை பார்த்து அவர் ஒரு வாக்கியம் சொன்னார் , அதை சொல்வதற்காகவே அங்கே வந்தவர் போல் , அதற்காகவே நான் பிறவி எடுத்து போல்  . அவர் சொன்ன அந்த வாக்கியம் இன்று வரை என்ன வழி நடத்துகிறது . அவர் சொன்னது ‘தேங்காய் சாப்பிட்டால் கழியும் டா ‘ 🙂 !!

அதை தொடர்ந்து , அவரை பற்றி எங்க அம்மா கூறும் போதெல்லாம் கேட்ப்பேன் யாரு அந்த ‘தேங்காய் சாப்ட்டா கழியும்னு சொன்னாரே அவரா ?

Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s