மதுரை விஜயம்

வாழ்க்கையில் ஆச்சரியம் என்னும் விஷயம் தான் எத்தனை மகத்தானது , ஆச்சரியங்கள் தான் நேற்றை இன்றில் இருந்து வேறுபடுத்துகிறது .

நம்மை நாமே ஆச்சரியபடுத்தி கொள்ள வேண்டி உள்ளது . ஆச்சரியங்கள் தான் நம் வாழ்வின் நிகழுவுகள் யாவும் முன்பே முடிவு செய்யப்பட்டது என்னும் என்னத்தை உடைக்கிறது . ஒரு மோசமான படைப்பாளி எழுதிய திரைப்படத்தின் முகியமில்லா கதாபாத்திரம் தான் நாம் என்னும் என்னத்தை உடைக்கிறது .
நினைத்து பாருங்கள் இவ்வளவு ஆச்சரியங்களை , தற்செயல் நிகழுவகளை ஒருவனாய் யாரும் வடிவு அமைத்திருக்க வாயிப்பில்லை .
என் வாழ்வில் இப்படி பட்ட ஆச்சரியங்களை எனக்கு பரிசளித்த கணங்கள் அனைத்துமே தற்செயலானவை , பெரிதும் எதிர் பார்க்காமல் நடந்தவை .
அந்த நொடிக்கான விதை பல காலமாக என்னுள் ஒரு பித்து நிலையாய் ஆட்கொள்ளும் . சில பயணங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றோ , 
இந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்றோ இல்லை ஒரு புத்தகத்தை வாசித்தே ஆக வேண்டும் போன்ற பித்து நிலைகள் . 

காவல் கோட்டம் நாவல் அப்படி ஒரு பித்து நிலையை என்னுள் உருவாக்கியது . இந்த நாவல் மதுரையின் அறநூறு ஆண்டுகால வரலாற்றை பற்றி பேசும் நாவல் . இந்த காலத்தில் மதுரையில் வாழும் மனிதர்களை பற்றி பேசும் நாவல் . வரலாற்று நாவல்கள் செய்யும் முக்கியமான விஷயம் , மறந்து போன மனிதர்களுக்கு ஒரு விலாசத்தை அளிக்கிறது . அவர்களின் மறந்து போன முகங்களை நமக்கு அறிமுக படுத்துகிறது . ஒரு விதமான நெருக்கத்தை நாம் உணர்கிறோம் , அவர்கள் நாம் தொடகூடிய தூரத்தில் இருப்பதாய் உணர்கிறோம் . இவர்களின் வாழ்க்கை நம்மை பாதிக்கிறது , எவ்வளவு தான் காலம் கடந்தாலும் மனிதர்களின் அடிப்படை தேடல் தொடர்ச்சியாய் நிகழும் ஒரு செயல் . கால வெளியில் தொடர்ந்து மனிதன் கேள்விகளை தொடுத்த வண்ணம் உள்ளான் , அவை  என்றும் மனிதனுக்கு தேவையான ஒன்று தான் . 

காவல் கோட்டம் நாவல் கதை சுருக்கம் : 

அறநூறு ஆண்டு காலமாய் மதுரை மண்ணில் காவலுக்கும் , களவுக்கும் இருக்கும் தொடர்பை  பற்றி பேசுகிறது இந்த நாவல் .
நாவலின் தொடக்கத்தில் மதுரையை நகரத்தை வடக்கில் இருந்து வந்த சுல்தானிய படைகள் பாண்டிய அரசனை தோற்கடித்து மதுரையை கைபற்றுகிறது .
இதனை தொடர்ந்து மதுரையின் காவலாளிகளாக இருந்த கள்ளர் சமூகத்ததை சேர்ந்தவர்கள் காவல் உரிமையை இழந்து திருடர்களாக மாறுகிறார்கள் .
திருட்டே ஒரு தொழிலாக மாறி , அதை சார்ந்த ஒரு சமூகமாக இவர்கள் மாறுகிறார்கள் . காலம் மாற்றத்தில் நாயக்கர்கள் மதுரையை மீண்டும் கைபற்றியவுடன் இவர்கள் காவல் உரிமை மீண்டும் கிடைக்கிறது .
இப்படியே மதுரையின் வரலாறு தோறும் இவர்கள் சில நேரங்களில் காவல்காரர்கலாகவும் , சில நேரங்களில் திருடர்களாகவும் வாழ்கிறார்கள் .’கஞ்சியை உறுதி செய்ய காவலும் , காவலை உறுதி செய்ய களவும் ‘ என்ற ஒரு வாழ்க்கை இவர்களுடையது .

இந்த நாவலை படித்த பொழுது , மதுரையின் வரலாற்றின் மிச்சத்தை , அதன் இன்றைய காலத்தில் இருக்கும் சில வரலாற்று சின்னங்களை சென்று பார்க்க வேண்டு என்று தோன்றியது . 
முக்கியமாக திருமலை நாயக்கர் கட்டிய புதுமண்டபம் (எ) வசந்த மண்டபம் , திருமலை நாயக்கர் மஹால் , பத்து தூண் , விளக்கு தூண்  போன்ற இடங்கள் . இதை தவிர மதுரை கள்ளர்கள் காவல் காத்த தெருக்களில் நடந்து செல்ல வேண்டும் என பட்டது . 

மதுரை :
30 ஆகஸ்ட் அன்று திருச்சியில் இருந்து மதுரை சென்று அடைந்தேன் , மதிய உணவு அருந்திவிட்டு கோவில் இருக்கும் சித்திரை வீதிக்கு சென்றேன் . அங்கு இருந்த கோபுர சிற்பங்களை பார்த்து மெய் மறந்தேன் , தமிழ் நாட்டுக்கு ஒரு சிறப்பு இருப்பதாய் ஜெயமோகன் சொல்வார் , ‘தமிழ் நாட்டில் தான் உலகத்தின் சிறந்த சிற்பங்கள் கோவில்கள் தோறும் நிறுவப்பட்டுள்ளது , அதே போல் உலகின் அசிங்கமான் அரசியல் சிலைகளும் தமிழகத்தில் தான் அதிகம் ‘ . எவ்வளவு அழகான தத்ரூபமான சிற்பங்கள் .

புது மண்டபம் :


இன்று அங்கு செல்பவர்களுக்கு அது வரலாற்று முக்கியத்வம் வாயிந்த இடம் என்பதே
தெரியவில்லை . பெரிதும் பெண்கள் உடைகள் தெய்ப்பதர்காகவே அங்கு செல்கிறார்கள் .
மதுரையை சேர்ந்த ஒரு நண்பனிடம் , மதுரை போய் வரலாற்று சிறப்பு உள்ள இடங்களை பார்க்க இருப்பதாய் சொன்ன உடன் ஒரு நமிட்டு – சிறுப்பு சிரித்தார் .
இன்று மதுரை அதன் வரலாற்றை மறந்து விட்டதோ என்று படுகிறது . வசந்த மண்டபம் , தெற்கு சித்திரை வீதியில் , தெற்கு கோபுரத்திற்கு நேர் எதிரில் இருக்கும் மண்டபம் .
திருமலை  நாயகர்களால்  கட்டப்பட்ட முக்கியமான மண்டபம் , அழகான சிற்ப்பங்கள் நிறைந்த மண்டபத்தின்  உல் பகுதிகள் பெரிதும் இன்று மூட பட்டு உள்ளது . அந்த மடபத்தின் நான்கு ஓரங்களில் இருக்கும் பகுதிகளை மட்டும் தான் காண முடியும் . மண்டபத்தின் மூடப்பட்ட இடத்தில் முதல் பத்து நாயக்கர் மன்னர்களின் சிற்பங்கள் இருக்கிறது , இதை தவிர முகப்பில் இருக்கும் குதிரை வீரர்களின்  சிற்ப்பங்கள் , எண்ணற்ற யாளி சிற்பங்கள் குறிபிடத்தக்கவை .
பத்து தூண் :

இது புதுமண்டபத்துக்கு பின்னால் உள்ள ஒரு பகுதி , முன்பு எப்பவோ அரண்மனையின் முகப்பு பகுதியாய் இருந்து இருக்க வேண்டும் . பிறகு  படையெடுப்புகளில் இடிக்க பட்டு இருக்கலாம் என்று சொல்கிறார்கள் . பெரும் உயர தூண்கள் , ஒரு முகப் வாயில் போல் , இருபுறமும் கருங்கல் சுவர்கள் நடுவில் இந்த உயர் தூண்கள் .
இந்த தூண்கள் காலம் தோறும் பல்வேறு கதைகள் சுமந்து கேட்பார் அற்று கிடந்தன .

விளக்கு தூண் :

மதுரையின் பிரிட்டிஷ் கலெக்டராக பணியாற்றிய ப்லாக்பன் பனி ஒய்வு பெற்று செல்லும் போது , அவரின் நினைவாக எழுப்ப பட்டது தான் இந்த விளக்கு தூண் .
ப்லாக்பன் தான் மதுரையை சுற்றி உள்ள கோட்டை சுவர்களை இடித்தவன் . மதுரையின் கோட்டை , நாயக்கர் அரசர்களில் முதலும் மற்றும் சிறந்த அரசரான
விஸ்வநாத  நாயக்கரால் கட்டப்பட்ட கோட்டை .
இந்த இடிப்பு தான் மதுரையை தன் கட்டுபாட்டில் கொண்டு வருவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த முதல் முயற்சி .

இந்த கோட்டையை இடித்தால் மதுரை வளர்ந்தது என்றாலும் , வரலாற்றின் ஒரு மிக பெரிய ஆவணத்தை இடித்தது ஒரு தவறு என்று அவர் உணர்ந்திருப்பாரா என்று தெரியவில்லை .

திருமலை நாயக்கர் மஹால் .
மதுரையின் நாயக்கர் அரண்மனையாக திருமலை நாயக்கரால் கட்டப்பட்டு , பின்பு பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகார மையமாக பணியாற்றிய மஹால் .
உயரமான தூண்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ள மிக பெரிய மஹால் . தூண்களை இணைக்கும் பகுதிகளில்  அழகு – அழகாய் செதுக்க பட்டுள்ள சிலைகள் .
யாளிகள் யானைகளின் தும்பிக்கை கடித்து கொண்டு இறக்கைகளை  விரித்து நிற்கும் சிலை . யானை தூணின் அடிபகுதியில் இருந்து மேல் எழும் , அதற்க்கு மேல் யாளிகள் , இதற் போல் எண்ணற்ற  அடுக்களாய் கட்ட பட்ட தூண்கள் . வானை நோக்கி எழ துடிக்கும் ஒரு பேரரசின் ,
அதன் மன்னர்களின் அதிகாரத்தை வானுக்கு சொல்பவை போல் .
மகாலின் நடு பகுதியில் மேல் உள்ள  வெட்டை வெளி , வெளிச்சமும் காற்றும் அதன் வழியாக மாகலின் உள்ளே வந்து அரண்மனையை நிரப்பியது.
அரண்மனையின்  வெட்டை வெளியான பகுதியை சுற்றி நான்கு புறமும் தூண்களின் அழகான சிற்பங்கள் .
 ஒரு பகுதியின் யாளி சிற்பங்கள் மட்டும் சிவப்பு – மயில் பச்சை சாயம் பூச பட்டு இருந்தன . சிலைகள் பளிங்கு கற்களால் செய்ய பட்டவை போல் வெண்மையாக இருந்தன .
அரண்மனையின் மேல் சுவர்களின் வரைய பட்டுள்ள வண்ணங்களும் , கோலங்கள் போன்ற படங்களும் மேலும் அழகை கூட்டியது .

இதனை தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனை சந்திப்பதாய் திட்டம் . அவர் மதுரையில் அயோத்திதாச பண்டிதரை பற்றி பேசுவதற்காக வந்து இருந்தார் .

அவருடன் இலக்கிய நண்பர்கள் சிலரை சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.
அவரை சந்திக்க நியூ காலேஜ் ஹோவ்சுக்கு சென்றேன் . அதை பற்றி தொடர்ந்து வரும் கட்டுரைகளில்.

Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

2 thoughts on “மதுரை விஜயம்”

  1. Even when we were there we never realised the places were of historical importance .. we were there for 4 years .

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s