ஒற்றரைவைக்கோல் புரட்சி

மாசனபு ·புகோகா , நவீனத்வ சித்தாந்தத்தின் உச்சத்தில் ஒரு மாற்று விவசாயத்தை உலகுக்கு பரிசு அளித்தவர் .

அவருடைய ‘ஒற்றரைவைக்கோல் புரட்சி’ இயற்க்கை சார்ந்த வாழ்க்கைக்கான ஒரு வரைபடம் என கூறலாம் .

இளமை பருவத்தில் புகோகா தாவரங்கவியல் ஆராய்ச்சி
மாணவன் , பல்வேறு கருத்துக்களால் அலைகிழிக்கபட்டு
சுற்றி திரிகிறார் . ஒரு தருணத்தில் குப்பை கூடாரத்தில் வளர்ந்து
கிடக்கும் ஒரு வைக்கோலை கண்டு அதை புரிந்து கொள்ள காடுகளிலும் , மலைகளிலும் திரிகிறார் .

மலையின்  உச்சியில் ,இயற்கையும் தானும் மட்டும்
அமர்ந்து இருக்கும் காலை பொழுதில் ஒரு பறவையின் கீறிச் சத்தம்  கேட்டு அவர் மனம் நெகிழி தன் வாழ்வின்
ஆதாரத்தை கண்டு கொண்டார் .

ஜென் தரிசனத்தின் செயல் விளக்கம் ஆக  இவரின் விவசாயத்தை  விளக்கலாம் . இயற்க்கை மனிதனுக்கு எண்ணற்ற செல்வதை அளிக்கிறது . மனிதன் தன் அறிவின் ஆதார இயல்பினால் , அதை பிரித்து  அறிய முயல்கிறான் . இயற்க்கை ஒரு பேர் இருப்பு அதை மனிதன் அதன் ஒட்டுமொத்த தன்மைய புரிந்து கொள்ளமால் செய்யும் மாற்றங்கள் அழிவையே நோக்கி செலுத்தும் என்பதே  புகோகாவின் வாதம் .
நவீன  விவசாயம் மண்ணுக்கும் – மனிதனுக்கும் இருந்த உறவை முற்றாக துண்டித்துவிட்டது . உற்பத்தியை மட்டும்  உயர்த்தும்  நோக்கு கொண்டு உலகம் முழுக்க பரவியிருக்கும் இந்த விவசாய முறை மண்ணை முடமாக்கி , விவசாயிகளின் பாரம்பரிய அறிவை , அவர்கள் நூற்று ஆண்டுகளாய் கற்று வந்த மரபான விவசாயத்தை அழித்து விட்டது .

இதன் காரணமாக புகோகா காண்பது மனிதனின் அபத்தமான ஆசை . நுகர்வோர் , இயற்க்கை-சார்ந்த வாழ்க்கையை கைவிட தொடங்கிய உடன் , விவசாயிகளும் அதற்க்கு ஏற்ப மாறுகிறார்கள் . உதாரணமாக நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் , பெரும்பான  பழங்கள் வருடம் முழுவது கிடைக்கும் வாயுப்பு இருக்கிறது. இதனால் விவசாயிகளும் பூச்சி-கொள்ளிகளும் , உரங்களும் . மரபு-அணு மாற்று முறையால்  உருவாக்கப்படும் விதைகள் பயன் படுத்துகிறார்கள் .
உலகமே ஒரு சந்தை என்னும் உலகளாவிய  மாற்றம்  மேலும் விவசாயிகளின் நிலைமையை பாதித்து இருக்கிறது .
 விவசாயம் வரும் காலங்களில் இந்தியா போன்ற நாடுகளில் பெரும் கம்பெனிகள் கைபற்றி கொள்வார்கள் என எதிர்பாக்கலாம் , நாடு செல்லும் திசை அதுவே .

புகோகா , காந்தி போன்றவர்கள் நவீனத்தின் கோர முகத்தை முன்பே கண்டு கொண்டார்கள் . காந்தி தன்னுடைய ‘ஹிந்த்-ஸ்வரசில்’ ஒரு விரிவான பின்-நவீனத்வ சமூதாயத்தின் வரைபடத்தை அளிதிரிந்தார் . ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை த்யாகத்தின் அடிப்படையில் அமையும் ஒன்று , அதை பெரும்பான்மை ஏற்கும் நாள் மிக தொலைவில் இருக்கிறது .

புகோகா அளிக்கும் முக்கியமான சிந்தனை என்பது முழுமை நோக்கு , மேலை சிந்தனை இயற்கையை புறவயமாக  நோக்கி அதை ஆராய்ந்து இயற்கையை அளக்க முயல்கிறது . இதை ·புகோகா ஏற்பதில்லை , அவர் இந்த இயற்க்கை ஒரு பேரிருப்பாக கருதுகிறார் . நம் மனங்களில் நாம் அறியும் விஷயங்களை வயித்து இயற்கையை முழுமையாக அறிய முடியாது என்பது அவர் பார்வை .

 ஐன்ஸ்டீனின் சார்பு தத்துவத்தை ஒரு அரைகுறை ஐய்ரோப்பிய நோக்கு என்று புகோகா தாண்டி செல்கிறார் .

அடிப்படையான இந்த சித்தாந்த பார்வை தான் புகோகா அளிக்கும் அனுபவம் .
Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s