திருநெல்வேலி பயண குறிப்புகள்

திருநெல்வேலி பயண குறிப்புகள்

கடந்த சனி ஞாயிறு திருநெல்வேலி சென்று இருந்தேன் . பெங்களூரில் இருந்து நண்பர் சாய் , ஹரி , அருண் மற்றும் நான் வெள்ளி இரவு கிளம்பி சனி காலை திருநெல்வேலி செல்வதாய் திட்டம் . பேருந்து பயணம் 11 மணி நேரம் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது . வோல்வோ எ.சி பேருந்து என்பதால் கொஞ்சம் பரவாயில்லை . ஆனாலும் அவர்கள் விடாபிடியாக ‘ஆறு’ படம் மூலம் எங்களுக்கு தல வலியை பரிசு அளித்து இருக்க வேண்டாம் .

சனி காலை பாளையத்தில் எங்களுக்கு அளிக்க பட்ட விடுதியின் அறையில் இளைப்பாறிவிட்டு , காலை உணவுக்கு சென்றோம் . சனி மாலை தான் திருமண வரவேற்ப்பு என்பதால் எங்காவது செல்லலாம் என்று முடிவு எடுத்தோம் . பாபநாசம் , குற்றாலம் போன்ற பல இடங்கள் யோசித்த பிறகு அங்கேயெல்லாம் அவ்வளவு தண்ணீர் இல்லை என்பதால் , திர்ப்பரப்பு போகலாம் என ஒரு இண்டிகா வாடகைக்கு எடுத்து கொண்டோம் .

திற்பரப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான நீர்வீழ்ச்சி , திற்பரப்பு எனும் ஊரில் உள்ளது . ஆற்றின் கரையோரம் ஒரு சிவன் கோவில் இங்கே பிரசித்தம் .

கார் பயணம்

திருநெல்வேலியில் இருந்து கிளம்பி நான்கு வழி சாலை வழியாக திர்ப்பரப்பு நோக்கி செல்ல தொடங்கிய கனமே , மனம் எண்ணற்ற ஞாபகங்களால் நிறைந்தது , கல்லூரி நாட்கள் காரின் கண்ணாடியில் ஒரு நாடகம் போல் அரங்கேறியது . நாகர்கோவில் நெருங்குவதை குளிர் காற்று மனதுக்கு உணர்த்தியது . எண்ணற்ற வின்ட் மில்ல்கள் சாலையின் இரு புறமும் இருந்தன . சாலையின் இருபுறம் தொடர்ந்து வரும் மலை சிகரங்கள் , ஏதோ ஒரு கொழந்தையால் அப்பு அழுக்கின்றி தொடர்ந்து ஒரு சார்ட் பேப்பரில் வரைந்து வெயித்தது போல் . மலைகளின் உச்சியில் மேகங்கள் ஷாம்பூ நுரையை போல் காட்சி அளித்தது . குளிர் காற்றும் , மனதை ஒரு மெல்லிய சோகத்தில் ஆழ்த்தக் கூடிய ஒரு சிறு வெயிலும் உடல் ரோமங்களை சிலிர்ப்பூடியது .

திர்ப்பரப்பு அறுவி :

திர்ப்பரப்பு சென்று அடைந்த பொது நேரம் 10 – 10:30 மணி . தூரத்தில் இருந்த அருவியை பார்த்த உடனே உடல் சிலுர்த்தது , நாங்கள் எடுத்த முடிவை நாங்களே பாராட்டி கொண்டோம் . அப்படி ஒரு அழகு , அந்த அறுவி கொட்டும் பேர் ஓசை ஒரு பிரவாகமாய் சூழலை நிரப்பி விட்டது . உடைகளை கழற்றி விட்டு இயற்கையுடன் இணைந்து கொண்டோம் . மனிதன் அந்த ஆதி இயற்கையின் மடியில் தவழ தான் ஏங்கி தவிக்கிறான் போல , மலைகளின் உச்சிகளுக்கு நடந்து செல்கிறான் , ஆழ் கடலில் நீச்சல் அடிக்கிறான் , அருவிகளில் குல்லிகும் அனுபவமும் அதுவே . ஒரு ஒரு நீர் துளிகள் என் மேல் விழும் பொது , கண்களை மூடி கொண்டேன் , காற்றால் இழுக்க பட்டு, வெளிச்சத்தால் சலவை செயித ஒரு பாதையில் மிகப் பெரும் வேகத்தில் என்னை யாரோ இழுத்துக் கொண்டு சென்றார்கள். என் உயிர் அப்படியே வெளியே போகும் ஒரு உணர்வு , பாரம் அற்று என் உடல் ஒரு இறகை போல் நழுவியது . கண்களை திறந்து ஒரு நிமிடம் பார்த்தேன் தண்ணீர் என் மீது விழுந்து கொண்டு இருந்தது . இன்னும் உயிர் உடன் தான் இருக்கிறேன் .

மலையின் மடியில் சாய்ந்து கொண்டு முன்னால் விழும் அறுவியை பார்க்கும் பொது ஒரு வெள்ளி ஜரிகையை போல் நீர் துளிகள் , அதன் ஊடே சூரியன் நீச்சல் அடித்தது . அரை மணி நேரம் தொடர்ந்து குலித்தோம , அந்த முதல் நொடியின் ஆழத்தை நான் பிறகு உணரவில்லை . திற்பரப்பு சில நேரங்களில் தழுவிக்கொள்ளும் காதலி போல நீரால் வருடி கொடுத்தது , கூட்டமாய் மொத்தும் நண்பனை போல் முதுகை பதம் பார்த்தது .

குளித்து முடித்து , உடைகள் மாற்றி கொண்டு அறுவிக்கு அக்கம் – பக்கம் நடந்தோம் . கேர்ளா பாணி ஊர் , அமைதியான சூழல் , வாழை மரங்களும் , தென்ன தோப்புக்களும் கண்ணில் பட்டது . ஆற்றின் கரையோரம் நடந்து கோவில் நுழைவுக்கு சென்றோம் , நடை சாத்தி விட்டார்கள் . ஆற்றின் நடுவில் கட்டப்பட்ட பாலத்தில் நடந்து சென்றோம் , ஆற்றில் இரு யானைகள் குளுப்பாட்டி கொண்டு இருந்தார்கள் . நின்ற படி யானை தன் உடலை மிக லாவகமாக அசைத்து , பாகன் குளுபாட்ட அனுமதித்தது .

சிறிது நேரம் பிறகு திர்பரப்பில் இருந்து விடை பெற்று தொட்டி பாலம் நோக்கி பயணித்தோம் .

தொட்டி பாலம் :

ஆசியாவின் மிகவும் உயரமான மற்றும் நீளமான பாலம் இந்த தொட்டி பாலம் . பரழியாருக்கு குறுக்கே கட்டப் பட்டு இருக்கும் இந்த பாலம் , ஒரு பஞ்ச நிவாரண முயற்சியாக காமராஜர் காலத்தில் கட்ட பட்ட பாலம் . பாலத்தில் இருக்கும் தொட்டி போன்ற அமைப்பு உள்ள கால்வாயின் வாயிலாக தண்ணீர் ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு எடுத்து செல்லப் படுகிறது . விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுகாக்கள் இந்த பாலத்தால் தண்ணீர் பெறுகின்றன .

இந்த பாலத்தின் உயரத்தில் நின்று கொண்டு இரு புறமும் நீண்டு பரவி இருக்கும் தென்னன் தோப்புகளும் , அதற்கு ஊடே போகும் பரழியாரும் அற்புதமான் இயற்கை காட்சி . காற்று வீசும் வேகம் நம் மனதை பறக்க விடும் . ஒரு மிகபெரிய அமைதி , எவ்வளவு நேரம் வேண்டாலும் அங்கே இருக்கலாம் . ஒரு இசை கச்சேரி பார்க்கும் மன நிலையே உணர்ந்தேன் , காற்று சொல்லும் ராகத்திற்கு ஏற்ப மரங்கள் தலை அசைத்தன , வயோலின் வாசிப்பவனை போல . மேகங்கள் மிக அமைதியாக , மிக பொறுமையாக இன்னொரு உருவம் எடுத்த படி நகர்ந்து கொண்டு இருந்தது . தூரத்தில் தெரியும் மலை சிகரங்கள் காலத்தின் சாட்சியாக , மேகங்களின் முத்தங்களை குடித்தப் படி நின்றன . பழையாறு நெளிந்து செல்லும் ஒரு அடிப் பட்ட பாம்பை போல , விரிந்து கிடக்கும் புடவை காற்றில் மெலிதாய் அசைவதை போல தவழ்ந்து மரங்களுக்கு ஊடே சென்றது .

இயற்க்கை மனிதனுக்கு ஒரே நேரத்தில் , நான் எவ்வளவு அற்பமாணவன் என்றும் நான் எவ்வளவு உன்னதமானவன் என்றும் இரு முரணான உணர்வுகளை ஒரே நேரத்தில் அளிக்கிறது .

விடை பெற மனமே இல்லாமல் அங்கு இருந்து கிளம்பினேன் , வழியில் அயனி பழமும் , அன்னாசியும் உன்று விட்டு தொட்டி பாலத்தை விடை பெற்றோம் .

ஆதிகேசவன் ஆலயம் :

திருவட்டாறு ஆதி கேசவன் ஆலயம் செல்ல வேண்டும் என்று நான் சொன்னவுடன் பலரும் ஆச்சரியப் பட்டார்கள் . முன்பு ஒரு முறை அந்த கோவிலுக்கு சென்ற பொது , அந்த கோவிலின் சிற்ப்பங்களும் , கோவிலின் அமைப்பும் , 22 அடி ஆதிகேசவன் சிலையும் என்னை மிகவும் கவர்ந்தன . இம்முறை போனப் பொது கோவில் அடைத்து விட்டார்கள் . நடை திறக்க இன்னும் நிறைய நேரம் இருந்ததால் திரும்பி விட்டோம் .

[மேலும்]


Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s