நிலா கடல்

தேயுந்து , மறைந்து ,அலைந்து , துவைந்து மீண்டும் உயிர் பெற்றது உன்னோடு உடல் சேரத்தானா என்று ஏங்கியது நிலவு . ஏக்கமும்  , காதலும் ஒளியாய் நிலவில் விடைபெற்று  கடலை அனைத்துக் கொண்டது .
கடல் கருஞ்சாந்தில் வெள்ளி ஜரிகை கொண்ட ஒரு பெரும் சேலை போல் காட்சி அளித்தது . கடல் அலைகள் தாவியும் , குதித்தும் சந்தோஷத்தை வெளி படுத்தியது . இயற்கை ஆயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து செய்யும் அந்த ஒழுங்கின்மை , இத்தனை உயிர்களின் விதை , அந்த நிகழ்ச்சி அழகுக் கொள்ளும் நாள் – பௌர்ணமி இரவு . கடல் அலைகள் ஒரு கைக்குழந்தை கோவில் மணியை  எட்டி அடிக்க முயலும் பாவனையோடு எம்பி – எம்பி முத்தமிட முயன்றது .

கடல் அலை எழுப்பும் அந்த பெரும் இரைச்சல் , காற்று வாசிக்கும் அந்த உயிர் இசை , அனைத்தும் ஒரு மிக பெரிய நிசப்தத்தை கடல் கரையில் நிறுவியது .
காற்றும் , கடலும் ,  ஒளி எனும் மாய கைகளால்  இணைக்கப் பட்டு ஒரு மிக பெரிய இசை கச்சேரியை அமைதியாய் அரங்கேற்றியது .

எத்தனை எத்தனை கடல் அலைகள் , தண்ணீர் துளிகள் எவ்வளவு தூரம் ஆடியும் பாடியும் கடந்து வரும் ஒரு பிரளயம் . மனிதனால் அந்த ஆழ் கடலின் அமைதியை , உக்கிரத்தை நினைத்துக் கூட  பார்க்க முடியாது .
அது அவன் வாழும் இடம் அல்ல , அவனுக்கு வாயித்தது  எல்லாம் கால் அளவு தண்ணீரில் கழுவி கொள்ளவது தான் .
அது வேறு விதிகளால் கட்டு பட்ட ஒரு பிரபஞ்சம் . அந்த காட்சியின் அமைதி மனதை ஒரு பெரும் யோக நிலையில் ஆழ்த்தியது  .
மனம் ஒரு நிமிடம் இருத்தல் அறியாமல் எங்கோ மறைந்து போனதை போல் , அந்த எண்ணம் தோன்றும் வரை அது இருந்த இடம் தெரியவில்லை .

வானத்தில் நிலவை சுற்றி மேகம் காரட் துருவல்கள் போல் சிறு சிறு துகள்களாய்  தூவி இருந்தது .
காலம் அமைதியாய்  ஒரு செவ்வியல் ஓவியத்தை தீட்டி கொண்டு இருந்தது .

நமக்கு இருக்கும் கவலைகள் தான் எத்தனை அற்ப்பமானது , நாம் வாழும் நேரம் ஒரு திரைபடத்தின் ஒரு காட்சியை கூட முழுமையாய் பார்க்க இயலாத சொற்பம் . ஆனால்  நாம் கொள்ளும் அகந்தையும் , காழ்ப்பும் , பிரபஞ்சம் திருஷ்டி கழிக்க படைக்க பட்டவந்தான் மனிதனோ .
 என்ன செயிகிறேன் நான் , இந்த பெரும் நிகழ்ச்சியை எனக்குள் சொற்களாய் மாற்றுகிறேன்  . அந்த அழகை வார்த்தையால் அளக்க முயல்கிறேன் . ஞானம் என்னும் பாசாங்கால்  என்னை நானே சாந்தப் படுத்திக் கொள்கிறேன் . என்ன செய்யமுடியும் என்னால் , எனக்கு வாயித்ததேல்லாம் ஞானம் தான் , அதை கொண்டு நிம்மதி கொள்ள முடியாது , அகந்தை கொள்ளலாம் .
அமைதியாய் ஒரு அலை காலை வருடி விட்டு சென்றது , பயந்து கடல் நோக்கி இழுக்கப் பட்டவனாய் தல்லாடினேன் .
Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s