மகாபாரதத்தின் காலம் எனபது இந்தியா ஒரு பழங்குடி சமூகத்தில் இருந்து மேல் எழுந்து ஒரு நில உடமை சமூகமாக மாறும் கால கட்டம் . பெரும் அரசர்கள் உருவாகும் ஒரு காலத்தை காட்டுகிறது . அதற்கே உண்டான அற விழிமியங்களை பற்றி பேசுகிறது . பெரும் தெய்வங்களான சிவனும் விஷ்ணுவும் உருவாக தொடங்கி உள்ள காலமாகவே பார்க்க முடிகிறது . ரிக் வேத காலத்தில் அக்னியும் , இந்திரனும் தான் பெரும் தெய்வங்கள் . விஷ்ணு என்று நாம் இன்று அறியும் கடவுள் மூன்று தனி நம்பிக்கைகள் உள்ளிழுத்து கொண்டு உருவானது . எஸ் . எள் ப்ய்ரப்பா இந்த மகாபாரத கதையை அதன் புனித தன்மையை கலைத்து விட்டு ஒரு வரலாற்று நிகழ்வாக , ஒரு நாவலாக எழுதி இருக்கிறார் .
பருவா என்று கன்னடத்தில் வெளியான இந்த புகழ் பெற்ற நாவல் தமிழில் பருவம் என்று பாவண்ணன் அவர்காளால் மொழி பெயர்க்க பட்டுள்ள ஒரு மாபெரும் நாவல் .
கதை தொடங்கும் காலம் மகாபாரத யுத்தம் நிகழ உள்ளது . அதற்க்கான தயாரிப்பு ஏற்பாடுகளில் பாண்டவர்களும் , கௌரவர்களும் இருக்கிறார்கள் . முக்கியாமான கதை மாந்தர்கள் குந்தி , பீமன் , திரௌபதி , அர்ஜுனன் , யுயதனன் , பீஷ்மர் , துரோணர் போன்றவர்களின் என்ன ஓட்டங்களால் முன்னகர்கிறது .
நாவல் நாம் மரபாக அறிந்துள்ள தகவல்களை மறு அமைப்பு செய்கிறது. உதாரணமாக பாண்டுக்கு குழந்தை இல்லாததற்கு காரணம் அவன் ஆண்மையை இழந்தது தான் அன்றி முனிவரின் சாபம் இல்லை . குந்தி வரம் வாங்கி குழந்தை பெற்று கொள்ள வில்லை , நியோக முறையில் இன்னொரு ஆணுடன் உறவு கொண்டே பிள்ளைகள் பெற்று எடுக்கிறாள் . குந்திக்கு நியோகம் செய்யும் ஆண்கள் தேவர் லோகம் என்னும் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் வானத்தில் இருந்து வரும் தேவர்கள் அல்ல . இதை போல் நாம் தெரிந்த தகவல்களை மறு புரிதலுக்கு உண்டாக்கும் இந்த நாவல் .
திரௌபதி எப்படி ஐந்து ஆண்களை மணந்து கொண்டால் , அவள் எப்படி அவர்களுடன் உறவு கொண்டால் போன்று விஷயங்களை புனைவின் சாத்தியங்களுடன் எழுதி உள்ளார் . இந்த நாவல் நடைமுறை எதார்த்தத்தை பற்றி பேசும் இடங்கள் பெரும் நம்பக தன்மையுடன் எழுத பட்டுள்ளது .
கதையின் கதாபாத்திரத்தின் உளவியல் அமைப்பை விவரிக்கும் இடங்களில் , அவர்கள் நமக்கு நெருங்கிவிடுகிரார்கள் . பீமன் தர்மன் பகடை விளையாடியதை கடுமையாக கண்டிக்கிறான் . அவன் வாயிலாக நமக்கு கதை விவரிக்க படும் போது நாமும் அந்த கோபத்தை உணர்கிறோம் . பிறகு அதை அர்ஜுனன் அவன் தரப்பு நியாயங்களுடன் விளக்குகிறான் . இப்படியே பலரின் வாக்குமுலமாக கதை நகர்கிறது . அவர் அவரின் மனசாட்சி பேசும் நியாயங்கள் .
யுத்தம் முடியும் பகுதி ஒரு மிக பெரிய உணர்ச்சி பிரளயம் வெடிக்கிறது எல்லோர் மனங்களிலும் .









