வாழ்க்கையில் ஆச்சரியம் என்னும் விஷயம் தான் எத்தனை மகத்தானது , ஆச்சரியங்கள் தான் நேற்றை இன்றில் இருந்து வேறுபடுத்துகிறது .
அறநூறு ஆண்டு காலமாய் மதுரை மண்ணில் காவலுக்கும் , களவுக்கும் இருக்கும் தொடர்பை பற்றி பேசுகிறது இந்த நாவல் .
நாவலின் தொடக்கத்தில் மதுரையை நகரத்தை வடக்கில் இருந்து வந்த சுல்தானிய படைகள் பாண்டிய அரசனை தோற்கடித்து மதுரையை கைபற்றுகிறது .
இதனை தொடர்ந்து மதுரையின் காவலாளிகளாக இருந்த கள்ளர் சமூகத்ததை சேர்ந்தவர்கள் காவல் உரிமையை இழந்து திருடர்களாக மாறுகிறார்கள் .
திருட்டே ஒரு தொழிலாக மாறி , அதை சார்ந்த ஒரு சமூகமாக இவர்கள் மாறுகிறார்கள் . காலம் மாற்றத்தில் நாயக்கர்கள் மதுரையை மீண்டும் கைபற்றியவுடன் இவர்கள் காவல் உரிமை மீண்டும் கிடைக்கிறது .
இப்படியே மதுரையின் வரலாறு தோறும் இவர்கள் சில நேரங்களில் காவல்காரர்கலாகவும் , சில நேரங்களில் திருடர்களாகவும் வாழ்கிறார்கள் .’கஞ்சியை உறுதி செய்ய காவலும் , காவலை உறுதி செய்ய களவும் ‘ என்ற ஒரு வாழ்க்கை இவர்களுடையது .
மதுரை :
30 ஆகஸ்ட் அன்று திருச்சியில் இருந்து மதுரை சென்று அடைந்தேன் , மதிய உணவு அருந்திவிட்டு கோவில் இருக்கும் சித்திரை வீதிக்கு சென்றேன் . அங்கு இருந்த கோபுர சிற்பங்களை பார்த்து மெய் மறந்தேன் , தமிழ் நாட்டுக்கு ஒரு சிறப்பு இருப்பதாய் ஜெயமோகன் சொல்வார் , ‘தமிழ் நாட்டில் தான் உலகத்தின் சிறந்த சிற்பங்கள் கோவில்கள் தோறும் நிறுவப்பட்டுள்ளது , அதே போல் உலகின் அசிங்கமான் அரசியல் சிலைகளும் தமிழகத்தில் தான் அதிகம் ‘ . எவ்வளவு அழகான தத்ரூபமான சிற்பங்கள் .
புது மண்டபம் :
மதுரையை சேர்ந்த ஒரு நண்பனிடம் , மதுரை போய் வரலாற்று சிறப்பு உள்ள இடங்களை பார்க்க இருப்பதாய் சொன்ன உடன் ஒரு நமிட்டு – சிறுப்பு சிரித்தார் .
இன்று மதுரை அதன் வரலாற்றை மறந்து விட்டதோ என்று படுகிறது . வசந்த மண்டபம் , தெற்கு சித்திரை வீதியில் , தெற்கு கோபுரத்திற்கு நேர் எதிரில் இருக்கும் மண்டபம் .
திருமலை நாயகர்களால் கட்டப்பட்ட முக்கியமான மண்டபம் , அழகான சிற்ப்பங்கள் நிறைந்த மண்டபத்தின் உல் பகுதிகள் பெரிதும் இன்று மூட பட்டு உள்ளது . அந்த மடபத்தின் நான்கு ஓரங்களில் இருக்கும் பகுதிகளை மட்டும் தான் காண முடியும் . மண்டபத்தின் மூடப்பட்ட இடத்தில் முதல் பத்து நாயக்கர் மன்னர்களின் சிற்பங்கள் இருக்கிறது , இதை தவிர முகப்பில் இருக்கும் குதிரை வீரர்களின் சிற்ப்பங்கள் , எண்ணற்ற யாளி சிற்பங்கள் குறிபிடத்தக்கவை .
இது புதுமண்டபத்துக்கு பின்னால் உள்ள ஒரு பகுதி , முன்பு எப்பவோ அரண்மனையின் முகப்பு பகுதியாய் இருந்து இருக்க வேண்டும் . பிறகு படையெடுப்புகளில் இடிக்க பட்டு இருக்கலாம் என்று சொல்கிறார்கள் . பெரும் உயர தூண்கள் , ஒரு முகப் வாயில் போல் , இருபுறமும் கருங்கல் சுவர்கள் நடுவில் இந்த உயர் தூண்கள் .
இந்த தூண்கள் காலம் தோறும் பல்வேறு கதைகள் சுமந்து கேட்பார் அற்று கிடந்தன .
ப்லாக்பன் தான் மதுரையை சுற்றி உள்ள கோட்டை சுவர்களை இடித்தவன் . மதுரையின் கோட்டை , நாயக்கர் அரசர்களில் முதலும் மற்றும் சிறந்த அரசரான
இந்த கோட்டையை இடித்தால் மதுரை வளர்ந்தது என்றாலும் , வரலாற்றின் ஒரு மிக பெரிய ஆவணத்தை இடித்தது ஒரு தவறு என்று அவர் உணர்ந்திருப்பாரா என்று தெரியவில்லை .
உயரமான தூண்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ள மிக பெரிய மஹால் . தூண்களை இணைக்கும் பகுதிகளில் அழகு – அழகாய் செதுக்க பட்டுள்ள சிலைகள் .
அரண்மனையின் வெட்டை வெளியான பகுதியை சுற்றி நான்கு புறமும் தூண்களின் அழகான சிற்பங்கள் .
இதனை தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனை சந்திப்பதாய் திட்டம் . அவர் மதுரையில் அயோத்திதாச பண்டிதரை பற்றி பேசுவதற்காக வந்து இருந்தார் .
அவருடன் இலக்கிய நண்பர்கள் சிலரை சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.
அவரை சந்திக்க நியூ காலேஜ் ஹோவ்சுக்கு சென்றேன் . அதை பற்றி தொடர்ந்து வரும் கட்டுரைகளில்.










Excellent post ashok! I have never been to these places, I wish I could sometime!
Even when we were there we never realised the places were of historical importance .. we were there for 4 years .